MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • திவாலான வங்கியில் கணக்கு இருக்கா? உடனே செய்யவேண்டியது என்ன?

திவாலான வங்கியில் கணக்கு இருக்கா? உடனே செய்யவேண்டியது என்ன?

Bankrupt Insurance: இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் மட்டுமே. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திவால் ஆகும்போது இந்தப் பணம் கிடைக்கும். இந்தக் காப்பீட்டு தொகையை எப்படிப் பெறலாம் என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

1 Min read
Author : SG Balan
Published : Dec 15 2024, 10:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Bankrupt

Bankrupt

இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் 5 லட்சம் ரூபாய் மட்டுமே. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி திவால் ஆகும்போது இந்தப் பணம் கிடைக்கும். இந்தக் காப்பீட்டு தொகையை எப்படிப் பெறலாம் என்று இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

27
DICGC

DICGC

ஒரு வங்கி திவாலானால் அதன் வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் (DICGC) மூலம் வாடிக்கையாளர்கள் திவாலான வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கு காப்பீடு வழங்குப்படுகிறது.

37
Bank deposit rules

Bank deposit rules

பிப்ரவரி 4, 2020க்கு முன், இந்தியாவில் வங்கி டெபாசிட்டுகளுக்கான டெபாசிட் இன்சூரன்ஸ் வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ.10 லட்சம் டெபாசிட் வைத்திருந்தாலும், வங்கி திவாலானால் அவர் ரூ.1 லட்சத்தை மட்டுமே உத்தரவாதத் தொகையாகக் கோர முடியும்.

47
Investments

Investments

இந்த விதி 2020ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. டெபாசிட் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதாவது, திவாலான வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு உள்ளது.

57
Savings account

Savings account

வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுதல் அல்லது வங்கி நிரந்தரமாகப் மூடப்படுதல் தொடர்பான என்று அறிவிப்பு வெளியாகும் தேதியில், அந்த வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் வைத்திருக்கும் டெபாசிட் தொகை மற்றும் வட்டிக்காக காப்பீட்டுத் தொகை  பெறலாம். இது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை மட்டும் கிடைக்கும்.

67
Bank deposit insurance

Bank deposit insurance

வைப்புத்தொகை காப்பீட்டு முறையின் விதிகளின்படி, ஒரு வங்கி செயலிழந்தால், அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் 90 நாட்களுக்குள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இதில் அனைத்து சேமிப்பு கணக்குகள், நடப்புக் கணக்குகள் மற்றும் தொடர் கணக்குகள் அடங்கும்.

77
Bank insolvency

Bank insolvency

இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளும் DICGC காப்பீடு வழங்கப்படுகிறது. எனவே வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு ரூ.5 லட்சம் வரை கேரண்டி இருக்கிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
காப்பீடு
இந்திய ரிசர்வ் வங்கி

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved