- Home
- Business
- Flight Rules: இனி விமானத்தில் கூடுதல் கட்டணம் இல்லை, குடும்பத்தோடு ஒண்ணா உட்காரலாம்! 5 புதிய விதிகள்
Flight Rules: இனி விமானத்தில் கூடுதல் கட்டணம் இல்லை, குடும்பத்தோடு ஒண்ணா உட்காரலாம்! 5 புதிய விதிகள்
விமான டிக்கெட் புக் செஞ்ச பிறகு, சீட் செலக்ட் பண்ண 500-1000 ரூபாய் வரைக்கும் நீங்களும் அதிகமா கொடுத்திருக்கீங்களா? இனி அந்த கவலை வேண்டாம். விமான நிறுவனங்களின் இந்த கட்டணக் கொள்ளைக்கு அரசு முற்றுப்புள்ளி வச்சிருக்கு. புதிய விதிகளை தெரிஞ்சுக்கோங்க...

பயணிகளுக்கு சாதகமான புதிய விதிகள்
இனி செலவு குறையும்
ஒரு விமானத்தில் குறைந்தபட்சம் 60 சதவீத சீட்களை இலவசமாக தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இனி ஒதுக்கப்பட்ட சீட்டுக்காக ஒவ்வொரு முறையும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. 'நியாயமான அணுகலை' (Fair Access) உறுதி செய்யுமாறு DGCA விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இனி தனித்தனியா உக்கார வேண்டியதில்லை
குழந்தைகள் அல்லது குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு தனித்தனி சீட்கள் கிடைப்பது பெரிய பிரச்சினையாக இருந்தது. ஒன்றாக அமர விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தன. இனி, ஒரே PNR-ல் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அருகருகே (Adjacent) சீட்களை வழங்க வேண்டும்.
மறைமுக ரூல்ஸ் கிடையாது
DGCA இருக்கைகள் விஷயத்தில் மட்டுமல்ல, மற்ற சேவைகளிலும் கடுமை காட்டியுள்ளது. செல்லப் பிராணிகளை (Pets) கொண்டு செல்வதற்கான விதிகளை விமான நிறுவனங்கள் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வைத்திருக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினையும் வராது.
அப்பாடா, இனி பிரச்சினை இல்லை
நம்ம மொழில சொல்லுவாங்க
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

