அமர்க்களம் லுக்கில்அஜித்; கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதிக்!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லீ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வந்த அஜித், ஏற்கனவே 'விடாமுயற்சி' படப்பிடிப்பை முடித்து டப்பிங் பணியையும் நிறைவு செய்த நிலையில், தற்போது 'குட் பேட் அக்லீ' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.
இது குறித்த புகைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய சமூக வலைதளமான எக்ஸ்த்தல பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 'குட் பேட் அக்லீ' திரைப்படத்திற்காக நடிகர் அஜித், தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார். மேலும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்க்கும்போது அஜித் அப்படியே 'அமர்க்களம்' படத்தில் இருந்ததை போல் இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகை திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ், சுனில், நட்டி நடராஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அசத்தலான கேங்ஸ்டர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் அஜித்தின் காமெடியும் களைகட்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். உடல் முழுவதும் டேட்டோ, நகை என சும்மா மாஸ் கெட்டப்புக்கு மாறி அஜித் இப்படத்தில் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் 2 விக்கெட் காலி! கண்ணீருடன் வெளியேறிய இருவர் யார் யார் தெரியுமா?
மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலை குறி வைத்துள்ளதால், 'குட் பேட் அக்லீ' திரைப்படத்தின் ரிலீஸ் மே மாதத்திற்கு தள்ளிப் போய் உள்ளதாக கூறுகின்றனர். இந்த படத்தை ஒரு ரசிகராக இருந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளதால், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல கோடிக்கு அதிபதி; ராஜ வாழ்க்கை வாழும் ராணா டகுபதி சொத்து மதிப்பு!
இந்நிலையில் அஜித் பிரபல தெலுங்கு நடிகர் சுனிலுடன் பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்த வீடியோ மற்றும் ஷூட்டிங்யின் கடைசி நாளில் அஜித் மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்து கொண்ட புகைப்படங்களை ஆதிக் வெளியிட்டுள்ளார். இதில் அஜித் வெள்ளை நிற பனியன் ஷர்ட் அதன் மேல் ஷர்ட் அணிந்துள்ளார். கழுத்தில் கருப்பு கயிறால் ஆன ஒரு லாக்கெட் மற்றும் கையில் வாட்ச் என மிகவும் கூலாக போஸ் கொடுக்கிறார்.