இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் 2 விக்கெட் காலி! கண்ணீருடன் வெளியேறிய இருவர் யார் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து, கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது.
Bigg Boss Tamil season 8
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், போட்டியாளர்களை அதிரடியாக குறைத்து வருகிறது பிக்பாஸ். அந்த வகையில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில், இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
Bigg Boss Tamil Season 8 Contestant Safe Game
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8. தற்போது 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நோக்கி செல்கிறது. ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும், இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் சேஃப் கேம் விளையாடி வருவதாக பல விமர்சனங்கள் எழுந்து வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்க உள்ள தகவலை உறுதி செய்த விஜய் சேதுபதி, ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோரை வெளியேற்றினார்.
சும்மாவே இருந்தது போதும் வெளிய வாங்க; விஜய் சேதுபதி எலிமினேட் செய்த அந்த நபர் இவரா?
Vijay Sethupathy Evicted 2 Bigg Boss Contestant
கடந்த வாரம் இருவர் வெளியேறியதால், மீதம் தீபக், கானா ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா, ஜனனி, சத்யா, தர்ஷிகா, அன்ஷிதா, வி.ஜே.விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, உள்ளிட்ட 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே விளையாடி வந்தனர். மேலும் இந்த வாரம மிட் வீக் எவிக்ஷன் ஒன்றை நடத்தி பிக்பாஸ் ஒரு போட்டியாளரை வெளியேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் முழுவதும் அப்படி எதுவும் நடைபெறாத நிலையில், நேற்றைய தினம் நடிகர் சத்யா மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் இந்த வாரமும் 15 போட்டியாளர்களை 13 போட்டியாளராக மாற்றி உள்ளார் பிக்பாஸ். அதன்படி இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா தான் வெளியேறி உள்ளார்.
Sathya Sk and Tharshika Evicted
சத்யா பெரிதாக எந்த ஒரு கண்டென்ட்டும் கொடுத்து விளையாடிய நிலையில், தர்ஷிகா காதல் என்கிற பெயரில் கிரிஞ்சாக விளையாடி வந்தது தான் மக்கள் இவரை வெளியேற்ற காரணம் என கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே என்று உள்ள நிலையில், அடுத்தடுத்த வாரங்களிலும் டபுள் எவிக்ஷன் நடந்தால் அது ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதே மக்களின் கருத்து.
கைது செய்யப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் – குஷியில் ரசிகர்கள்!