பிறந்தநாளுக்கு வாழ்த்து; சூப்பர் ஸ்டார் வெளியிட்ட நன்றி அறிக்கை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய 74-ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தன்னை வாழ்த்திய அனைவருக்கும், அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில், தலைவர் நேற்று கேரவனில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் தன்னுடைய பிறந்தநாளில் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, 'என்னுடைய பிறந்தநாள் அன்று, என்னை மனமாற வாழ்த்திய என்னுடைய அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மதிப்புக்குரிய மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு,ம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய அன்பு தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், ஆந்திர முதலமைச்சர் நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் மற்றும் மதிப்பிற்குரிய ஓ.பன்னீர்செல்வம், வைகோ, வி. கே சசிகலா, திருநாவுக்கரசர், அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், அண்ணாமலை , பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவன், வாசன், ஏசி சண்முகம், அன்புத்தம்பி விஜய் மற்றும் என்னை வாழ்த்திய அனைத்து மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மற்றும் நடிகை சோபியா விவாகரத்து!
இதை தொடர்ந்து "திரை உலகத்திலிருந்து வாழ்த்திய நண்பர் கமலஹாசன், வைரமுத்து, எஸ் பி முத்துராமன் அவர்கள், விஜயகுமார், சத்யராஜ், பாலகிருஷ்ணா, ஷாருக்கான், அமீர் கான், பார்த்திபன், தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் அனேக நடிகர் மற்றும் திரை உலக தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் ஊடக நண்பர்கள், தொலைக்காட்சியினர், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலன் விரும்பிகளுக்கும் நண்பர்களுக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழ் மக்கள்... ஜெய்ஹிந்த்!! உழைத்திடுவோம்.. மகிழ்ந்திடுவோம்.. என தெரிவித்துள்ளார்.