Maaran movie : மாறன் படத்தை கண்டுகொள்ளாத தனுஷ்... புறக்கணிப்பின் பின்னணி என்ன?
Maaran Movie : படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. ஆனால் நடிகர் தனுஷ் மட்டும் மாறன் படத்தை புறக்கணித்து உள்ளார்.
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இவர், அடுத்ததாக அரவிந்த் சாமியை வைத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இப்படம் ரிலீசாகாமல் முடங்கிக் கிடக்கிறது. இதையடுத்து அருண்விஜய்யின் மாஃபியா படத்தை செம்ம ஸ்டைலிஷாக எடுத்து அனைவரையும் அசர வைத்தார்.
இதுதவிர மணிரத்னம் தயாரித்த நவரசா என்கிற ஆந்தாலஜி தொடரில் அக்னி என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் நரேன். அரவிந்த் சாமி, பிரசன்னா நடித்திருந்த இந்த குறும்படம் வெளியாகியபோது கோலிவுட்டே அவரை கொண்டாடியது. இது ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டுக்களும் கிடைத்தன.
இதையடுத்து தனுஷுடன் கூட்டணி அமைத்த கார்த்திக் நரேன், அவரை வைத்து மாறன் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. ஆனால் நடிகர் தனுஷ் மட்டும் மாறன் படத்தை புறக்கணித்து உள்ளார். அவரின் இந்த முடிவுக்கு காரணம் இப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்படுவது தானாம். இப்படத்தை தியேட்டரில் வெளியிடவே தனுஷ் விரும்பினாராம். ஆனால் அதற்குள் ஓடிடி-க்கு தயாரிப்பு தரப்பு படத்தை விற்றுவிட்டதால் தனுஷ் கடுப்பாகி விட்டாராம்.
இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படமும் நேரடியாக ஓடிடி-யில் தான் வெளியிடப்பட்டது. அப்போதும் நடிகர் தனுஷ் அப்படத்தின் தயாரிப்பாளருடன் மோதலில் ஈடுபட்டார். கோலிவுட்டில் இவ்வாறு கறாராக இருக்கும் தனுஷ், பாலிவுட்டில் ஆளே வேற மாறி இருக்கிறார். இந்தியில் அவர் நடித்த அட்ரங்கி ரே படமும் நேரடியாக ஓடிடி-யில் தான் வெளியானது. ஆனால் அங்கு அப்படத்தை தனுஷ் தீவிரமாக புரமோட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... SK 20 movie Update : உக்ரைன் நடிகையிடம் ஆங்கிலம் கற்கும் சிவகார்த்திகேயன்