MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!

Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அரசி விபத்தில் சிக்கி இருக்கிறார். அதன்மூலம் புது காதலும் மலர்ந்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 26 2026, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரின் மருத்துவ செலவுக்காக பணம் கொடுத்துவிட்டு வருமாறு கோமதியிடம் பாண்டியன் சொல்ல, கணவரின் பேச்சைக் கேட்டு தங்கமயிலின் வீட்டுக்கு செல்கிறார் கோமதி. அங்கு சென்று பார்த்தபோது தங்கமயில் வீட்டில் இல்லை. அப்போது மயிலின் அம்மா பாக்கியம் மட்டுமே வீட்டில் இருந்தார். அவரிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல், தான் கொண்டு வந்த பணத்தை கொடுத்துவிட்டு கிளம்புகிறார் கோமதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu : தர்ஷினி பற்றி கிடைத்த ஹிண்ட்... காப்பாற்ற களத்தில் குதித்த ஜனனி..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தங்கமயிலுக்கு தெரியவரும் உண்மை
Image Credit : Vijay TV You Tube

தங்கமயிலுக்கு தெரியவரும் உண்மை

கோமதி ஆட்டோவில் ஏறி கிளம்பிச் செல்லும் போது தங்கமயில் வீட்டுக்கு எண்ட்ரி ஆகிறார். இவங்க எதுக்கு இங்க வந்தாங்க என பாக்கியத்திடம் சென்று விசாரிக்கிறார். அப்போது உனக்கு மருத்துவ செலவுக்கு பணம் கொடுக்கலாம்னு வந்தாங்க நான் அதெல்லாம் வாங்க முடியாதுனு சொல்லி அனுப்பிட்டேன் என சொல்கிறார். உன் கையில என்ன இருக்கு என தங்கமயில் கேட்டபோது அவர் கை நிறைய பணம் இருப்பதை பார்த்து நீ எதுக்கு அவங்ககிட்ட இருந்த பணத்தை வாங்குன என சத்தம்போடு மயில், அந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு கோமதி வீட்டுக்கு கிளம்புகிறார்.

Related Articles

Related image1
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Related image2
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
35
பணத்தை திருப்பி கொடுத்த மயில்
Image Credit : jiohotstar

பணத்தை திருப்பி கொடுத்த மயில்

கோமதி வீட்டில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்போது கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. யார் என்று கோமதி சென்று பார்க்க, தங்கமயில் வாசலில் நிற்கிறார். உள்ளே வா என அழைத்தும் அவர் உள்ளே வர மறுக்க, பின்னர் அவரைப் பார்க்க வரும் ராஜி நலம் விசாரிக்கிறார். அப்போது நல்லா இருக்கேன் என்று சொல்லும் தங்கமயில், உங்க பணம் எனக்கு வேண்டாம், நானே சம்பாதிச்சு என் குழந்தையை பாத்துக்குறேன் என சொல்லி, அந்த பணத்தை கோமதி கையில் கொடுத்துவிட்டு கிளம்புகிறார் மயில்.

45
கோபத்தில் சரவணன்
Image Credit : jiohotstar

கோபத்தில் சரவணன்

தங்கமயில் காசை திருப்பி கொடுத்ததால் கோபத்தில் இருக்கிறார் சரவணன். அப்போது அஞ்சலி அவருக்கு போன் போடுகிறார். அவரிடம் அவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா காசை திருப்பி கொடுத்திருப்பா என சொல்லிக்கொண்டிருக்க, அப்போது குறுக்கிட்டு பேசும் அஞ்சலி, இரண்டு தரப்பு கோபமும் நியாயம் தான், மயில் அவங்களோட தன்மானத்தை காப்பாத்திக்கணும் என்பதால் இப்படி செய்திருக்கிறார். இருந்தாலும் சரவணனுக்கு தங்கமயில் மீதுள்ள கோபம் குறையவில்லை.

55
தடம் மாறும் கதைக்களம்
Image Credit : jiohotstar

தடம் மாறும் கதைக்களம்

மறுபுறம் அரசி சாலையில் நடந்து செல்லும் போது பைக்கில் வந்த ஒரு இளைஞர் அவரை மோதிவிடுகிறார். அதில் அரசி கீழே விழ, அவரை அந்த இளைஞர் கைகொடுத்து தூக்கிவிடுகிறார். இதன்மூலம் அரசிக்கும் அந்த நபருக்கும் இடையே காதல் மலர்வது போல கதைக்களம் நகரும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அரசியின் இந்த புதுக் காதலை பார்த்து குமார் நிச்சயம் பிரச்சனை பண்ணுவார். இதையடுத்து என்ன நடக்கபோகிறது? அரசி மனசில் குமார் இடம்பிடிப்பாரா? இல்லையா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Recommended image2
Siragadikka Aasai : ஸ்ருதியை பழிவாங்க நீத்து போட்ட மாஸ்டர் பிளான்... மனோஜுக்கு டைவர்ஸ் கொடுக்க சம்மதித்த ரோகிணி
Recommended image3
Siragadikka Aasai : பாராட்டு மழையில் நனையும் முத்து... பொறாமைப்படும் மனோஜ்; பார்வதிக்கு போட்டியாக களமிறங்கும் விஜயா...!
Related Stories
Recommended image1
Pandian Stores 2: கோவிலில் சொக்கிப்போன சரவணன்.! நீதிமன்றத்தில் பொங்கிய தங்க மயில்.! புதிர்போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Recommended image2
Pandian Stores 2 : தங்கமயில் கேட்ட கேள்வியால் ஆடிப்போன சரவணன்... கோமதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved