- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமார் சொன்ன பொய் குற்றச்சாட்டை உண்மை என நம்பி, போலீஸ் கதிரை கைது செய்து உள்ளது.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2சீரியலில் முத்துவேலும் கதிரும் ஒன்றாக தோட்டத்துக்கு சென்று பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த குமார், கதிர் உடன் சண்டைபோட்ட நிலையில், அவர்களை பிரித்துவிட முத்துவேல் முயன்றபோது அவரை குமார் தள்ளிவிட்டதில், முத்துவேல் தலையில் கல் இடித்து சம்பவ இடத்திலேயே அவர் மயங்கிப்போனார். இதையடுத்து அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய குமார், வீட்டில் வந்து, கதிர் தள்ளிவிட்டதில் தான் முத்துவேலுக்கு இப்படி ஆச்சு என கூறிவிடுகிறார். இதனால் கதிரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இதன்பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
போலீஸ் விசாரணை
முத்துவேல் வீட்டுக்கு வரும் போலீஸ் அனைவருடனும் விசாரணை நடத்துகிறது. குறிப்பாக கதிர் பற்றியும் கேட்டு தெரிந்துகொண்டனர். இதன்பின்னர் காவல்நிலையம் சென்ற போலீசார், கதிரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக கூறி அவரை ஜெயிலுக்கு அழைத்து செல்கிறார்கள். ரிமாண்டில் எடுத்துவிட்டால் இனி ஒன்னுமே செய்ய முடியாது, கோர்ட்டுக்கு சென்று தான் அவரை வெளியே எடுக்க முடியும் என வக்கீல் சொல்லிவிட, சரவணன், செந்தில், பாண்டியன் ஆகியோர் சோகத்துடன் வீட்டுக்கு செல்கிறார்கள்.
கைதாகும் கதிர்
வீட்டில் அவர்கள் கதிரை அழைத்து வருவார்கள் என ராஜி ஆவலோடு காத்துக் கொண்டிருக்க, அவர்களோ கதிர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விஷயத்தை சொன்னதும் ராஜி பதற்றம் அடைகிறார். கோமதியும் மகன் கைது செய்யப்பட்ட விஷயம் அறிந்து கண்ணீர் சிந்துகிறார். நீங்க கவலைப்படாதீங்க கதிரை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடலாம் என சொல்லி அவர்களை சமாதானப்படுத்துகிறார் பாண்டியன். மறுபுறம் சக்திவேல் மற்றும் குமார் இருவரும் முத்துவேலை பார்க்க ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.
குமாருக்கு சிக்கல்
ஆஸ்பத்திரியில் முத்துவேல் கண்விழிக்காமல் இருக்க, வெளியே பதற்றத்துடன் நடந்துகொண்டிருக்கிறார் குமார். பெரியப்பா கண் முழிச்சா நம்ம தான் அவரை தள்ளிவிட்டோம் என்கிற உண்மை தெரிந்துவிடுமே என்கிற பயத்திலேயே இருக்கிறார் குமா. அந்த நேரம் பார்த்து டாக்டர் அங்கு வர, அவர் முத்துவேலை பரிசோதிக்கிறார். அப்போது முத்துவேல் கண்விழித்துவிடுகிறார். பின்னர் வெளியே வந்த டாக்டர், சக்திவேலிடம் முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்கிறார். அதைக்கேட்டதும் குமார் பேரதிர்ச்சி அடைகிறார். அய்யய்யோ நாம் மாட்டிக்கொள்வோமே என்கிற பயம் அவர் கண்ணில் தெரிகிறது. தான் தப்பிப்பதற்காக குமார், முத்துவேலை என்ன செய்யப்போகிறார். பெரியப்பாவை கொலை செய்யப்போகிறாரா? என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

