MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : போலீசுக்கு பயந்து குமார் எடுக்கும் விபரீத முடிவு... முத்துவேல் உயிருக்கு ஆபத்து

Pandian Stores 2 : போலீசுக்கு பயந்து குமார் எடுக்கும் விபரீத முடிவு... முத்துவேல் உயிருக்கு ஆபத்து

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் மருத்துவமனையில் கண்விழித்த நிலையில், அவரை கொல்ல முயற்சித்துள்ளார் குமார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 03 2026, 09:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் தலையில் அடிபட்டு மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை கதிர் தான் தள்ளிவிட்டு இந்த நிலைமைக்கு கொண்டு வந்துவிட்டான் என குமார் பொய்யான வாக்குமூலம் அளித்ததை அடுத்து, போலீசார் கதிரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மறுபுறம் ஆஸ்பத்திரியில் அண்ணன் எப்போ கண்விழிப்பார் என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருக்கிறார் சக்திவேல். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai : சிந்தாமணியை நம்பி ரோகிணி சொன்ன டாப் சீக்ரெட்... முத்துவுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கண்விழித்த முத்துவேல்
Image Credit : jiohotstar

கண்விழித்த முத்துவேல்

டாக்டர் முத்துவேலை பரிசோதித்த போது அவர் கண்விழித்துவிடுகிறார். இதையடுத்து முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சக்திவேலிடம் டாக்டர் சொல்ல, குமாரும், அவரும் உள்ளே சென்று முத்துவேலை பார்க்க செல்கின்றனர். அப்போது கதிர் தான் அண்ணேன் உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கான். அவனை போலீசில் புடிச்சி கொடுத்தாச்சு. அவன் வெளிய வர முடியாதபடி செய்யுறேன் என சக்திவேல் சொல்ல, அதைக்கேட்டு ஷாக் ஆன முத்துவேல், குமாரை நோக்கி தன் கையை காட்டுகின்றார்.

Related Articles

Related image1
Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Related image2
Pandian Stores 2 : கதிரை அடிவெளுத்த சக்திவேல்... கோமதியிடம் சிக்கும் சரவணன் - அஞ்சலி
35
பயத்தில் குமார்
Image Credit : jiohotstar

பயத்தில் குமார்

பின்னர் நர்ஸ் அங்கு வந்து அவரை தொந்தரவு செய்யாதீங்க, எல்லாரும் வெளிய போங்க என சொல்லி அனுப்பிவிடுகிறார். மறுபுறம் குமாரை, நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அண்ணன் கண்விழித்த விஷயத்தை சொல்லி, அவரிடம் வாக்குமூலம் வாங்க வரச்சொல் என கூறி அனுப்புகிறார் சக்திவேல். குமார் பயத்தில் போலீஸ் ஸ்டேஷன் செல்லாமல் மருத்துவமனை வாசலிலேயே நின்றுகொண்டிருக்கிறார். இருப்பினும் மருத்துவமனையில் இருந்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டு முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்லிவிடுகிறார்கள்.

45
ஆஸ்பத்திரி செல்லும் ராஜி
Image Credit : jiohotstar

ஆஸ்பத்திரி செல்லும் ராஜி

கதிர் கைது செய்யப்பட்டதால், அவரை நினைத்தே ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும் கோமதி, ராஜி மற்றும் அரசி, எதுவும் சாப்பிடாமல், தூங்காமல் இருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் பழனி, முத்துவேல் கண்விழித்த விஷயத்தை சொல்ல, அனைவரும் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். இருப்பினும் கதிரை எப்படியாவது மீட்டு விடுங்கள் என பாண்டியனிடம் ராஜி கூற, அவரோ, நான் என்ன ஆனாலும் என் பையனை மீட்காமல் விடமாட்டேன் என சொல்கிறார். பின்னர் கோமதியும், ராஜியும் ஆஸ்பத்திரிக்கு கிளம்பி செல்கிறார்கள்.

55
வசமாக சிக்கும் குமார்
Image Credit : jiohotstar

வசமாக சிக்கும் குமார்

ஆஸ்பத்தியில் சக்திவேல், தனியாக போன் பேசிக் கொண்டிருக்க, பழனி பில் கட்ட சென்றுவிடுகிறார். அப்போது தனியாக இருந்த குமார், முத்துவேல் அனுமதிக்கப்பட்டுள்ள ரூமுக்குள் சென்று, இவர் வாக்குமூலம் கொடுத்தா நம்ம ஜெயிலுக்கு போயிடுவோமே என பயந்து அவர் முகத்தில் இருந்த சுவாசக் குழாயை கழற்றி விடுகிறார். இதனால் முத்துவேல் மூச்சுவிட திணறிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து சக்திவேல் உள்ளே வருகிறார். அவர் குமாரிடம் என்னடா பண்ணிட்டு இருக்க என கேட்க, குமார் ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய கும்பல்... ஆணவத்தில் ஆடிய சிந்தாமணி ஜெயித்தாரா?
Recommended image2
Bigg Boss சீசன் 10-ல் காமன்மேனுக்கு விஜய் சேதுபதி கொடுத்த கோல்டன் சான்ஸ் - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Recommended image3
Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Related Stories
Recommended image1
Pandian Stores 2 : முத்துவேலுக்கு வில்லனாக மாறும் குமார்... கதிரை சிறையில் அடைத்த போலீஸ்
Recommended image2
Pandian Stores 2 : கதிரை அடிவெளுத்த சக்திவேல்... கோமதியிடம் சிக்கும் சரவணன் - அஞ்சலி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved