MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : கதிரை அடிவெளுத்த சக்திவேல்... கோமதியிடம் சிக்கும் சரவணன் - அஞ்சலி

Pandian Stores 2 : கதிரை அடிவெளுத்த சக்திவேல்... கோமதியிடம் சிக்கும் சரவணன் - அஞ்சலி

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முத்துவேல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்க சக்திவேல் சென்றுள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 29 2026, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2சீரியலில் கதிரும், முத்துவேலும் தனியாக காரில் தோப்புக்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவர்களை பாலோ பண்ணி வந்த குமார், கதிரிடம் சென்று பிரச்சனை பண்ணினார். இதையடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட, அவர்களை முத்துவேல் தடுக்க பார்த்தபோது குமார் தள்ளிவிட, அதில் கல்லில் இடித்து முத்துவேல் மயக்கம் அடைகிறார். இதையடுத்து கதிர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார். குமார் வீட்டில் வந்து கதிர் அடித்ததில் முத்துவேல் மயக்கம் அடைந்ததாக பொய் சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் சக்திவேல்
Image Credit : jiohotstar

ஆஸ்பத்திரிக்கு கிளம்பும் சக்திவேல்

குமார் சொன்னதை சக்தி வேல் உண்மை என நம்பி விடுகிறார். கதிர் மீது குமார் வீண் பழி போட்டு பிரச்சனையை பெரிதாக்கி உள்ளார். இதையடுத்து சக்திவேல் தன்னுடைய குடும்பத்தினருடன் காரில் ஆஸ்பத்திரிக்கு கிளம்புகிறார். அவர்கள் அனைவரும் அழுதுகொண்டே காரில் ஏறுவதை பார்த்த ராஜி, என்ன ஆச்சு என்ன பிரச்சனை என அப்பத்தாவிடம் விசாரிக்க, அவர் மேலோட்டமாக உங்க அப்பாவுக்கு முடியலையாம் என சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் பதறிப்போகும் ராஜி, இந்த விஷயத்தை கோமதிக்கு சொல்ல போன் போடுகிறார்.

Related Articles

Related image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Related image2
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
35
கோமதிக்கு போன் போட்ட ராஜி
Image Credit : jiohotstar

கோமதிக்கு போன் போட்ட ராஜி

கோமதி அந்த நேரத்தில் கோவிலில் இருக்கிறார். அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் போது ஒரு பெண் சரவணன் கோவிலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். பின்னர் கோவிலை சுற்றி வரும்போது சரவணன், அஞ்சலி உடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறார் கோமதி. இதைப்பார்த்து கடுப்பாகும் அவர் சரவணன் சும்மா விடக் கூடாது என அவர் அருகில் செல்ல முயன்றபோது ராஜியிடம் இருந்து போன் வருகிறது. அப்போது, அவர் அப்பாவுக்கு முடியாமல் இருக்கும் விஷயத்தை சொல்ல, கோமதி சரவணனிடம் பேசாமல் அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

45
டாக்டரிடம் கெஞ்சி கேட்ட கதிர்
Image Credit : jiohotstar

டாக்டரிடம் கெஞ்சி கேட்ட கதிர்

மறுபுறம் கதிர், முத்துவேலை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கிறார். அங்கு டாக்டர் அவருக்கு என்ன ஆச்சு என விசாரிக்கிறார். நடந்ததை சொல்லும் கதிரிடம், அவருக்கு வேற ஏதாச்சும் பிரச்சனை இருக்கா என கேட்க, அவருக்கு கேன்சர் இருக்கும் விஷயத்தை சொல்லிவிடுகிறார் கதிர். அதுமட்டுமின்றி கொஞ்ச நேரத்தில் அவருடைய சொந்தக்காரங்க வருவாங்க, அவங்க கிட்ட அவருக்கு கேன்சர் இருக்கும் விஷயத்தை சொல்லிடாதீங்க என கெஞ்சி கேட்கிறார் கதிர். அதற்கு அந்த டாக்டரும் சம்மதம் தெரிவிக்கிறார்.

55
கதிரை அடித்த சக்திவேல்
Image Credit : jiohotstar

கதிரை அடித்த சக்திவேல்

சிறிது நேரத்தில் சக்திவேல் ஆஸ்பத்திரிக்கு வருகிறார். அப்போது முத்துவேலுக்கு தேவையான மருந்து வாங்கி வந்து கொடுத்த கதிரை, உன்னால தாண்டா என்னோட அண்ணன் இந்த நிலைமையில் இருக்கார் என சொல்லி கன்னத்திலேயே அறைகிறார். நான் ஒன்னுமே பண்ணல என கதிர் சொல்ல, அருகில் இருந்த குமார், இவன் தான் பெரியப்பாவை தள்ளிவிட்டான், என் கண்ணால பார்த்தேன் என கூறுகிறார். குமார் சொன்னதை நம்பி, கதிரை அடிவெளுக்கிறார் சக்திவேல். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதன் பின் என்ன ஆச்சு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட ஜனனி... மயங்கி விழுந்த ஈஸ்வரி
Recommended image2
Siragadikka Aasai : வீட்டை அபகரிக்க சிந்தாமணி செய்யும் சூழ்ச்சி... முத்துவின் புது பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image3
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Related Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Recommended image2
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved