MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்

Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்

Pandian Stores 2 Serial Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் உடன் முத்துவேல் வெளியே சென்றதை பார்த்த குமார், அவர்களை பாலோ பண்ணி சென்று பிரச்சனை பண்ணி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 28 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் அரசி தன்னுடைய காலேஜுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருக்க, அப்போது கார்த்திகேயன் அந்த வழியாக செல்கிறார். அவர் அரசியை பார்த்ததும் வண்டியை நிறுத்து அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த குமார், அரசி, கார்த்திகேயனிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார். கார்த்திகேயன் அரசியிடம் பேசிவிட்டு சென்றபின்னர் குமார், அரசியிடம் சென்று யார் அவன் என விசாரிக்கிறார்.

Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குமாரை விரட்டிவிட்ட அரசி
Image Credit : jiohotstar

குமாரை விரட்டிவிட்ட அரசி

விசாரிக்க வந்த குமாரிடம், அவன் யாரா இருந்த உனக்கு என்ன என சண்டைபோடுகிறார் அரசி. அப்புறம் ஏன் அவன்கிட்ட பல்லை இழிச்சு பேசிக்கிட்டு இருந்த என குமார் கேட்க, நான் யார் கூட வேணாலும் பேசுவேன் அதைக்கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிரு என திட்டுகிறார் அரசி. இதையடுத்து அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார் குமார். பின்னர் ஒரு இடத்தில் குமார் நின்றுகொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து முத்துவேல், கதிர் உடன் காரில் செல்கிறார். அதைப்பார்த்த குமார் அவர்களை பாலோ பண்ணுகிறார்.

Related Articles

Related image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Related image2
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
35
முத்துவேலை ஃபாலோ பண்ணும் குமார்
Image Credit : jiohotstar

முத்துவேலை ஃபாலோ பண்ணும் குமார்

கதிரும், முத்துவேலும் தோட்டத்துக்கு செல்கிறார்கள். தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளதால், அங்கு வேலை பார்ப்பவர் முத்துவேலிடம் பணம் கேட்டிருக்கிறார். அதனை கொடுக்க தான் கதிரை அழைத்து வந்திருக்கிறார் முத்துவேல். பணம் கொடுத்ததும் கதிர் கிளம்பலாமா என கேட்க, அதற்கு முத்துவேல், வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடிக்குது, அதனால் இங்கு கொஞ்ச நேரம் மரத்தடியில் உட்கார்ந்து இயற்கை காத்து வாங்கிட்டு போகலாம் என சொல்கிறார். அதற்கு கதிரும் ஓகே சொல்ல இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

45
குமார் - கதிர் மோதல்
Image Credit : jiohotstar

குமார் - கதிர் மோதல்

அந்த நேரம் பார்த்து குமார் அங்கு வருகிறார். அவர் முத்துவேலிடம், இவன் கூட எதுக்கு வந்தீங்க. உங்களுக்கு எங்கயாச்சும் போகணும்னா என்னை கூப்பிட வேண்டியதுதான என கேட்கிறார். அதுமட்டுமின்றி நீங்க பண்றது தப்பு, இந்த விஷயம் மட்டும் அப்பாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும் என பேசிக் கொண்டிருக்கிறார். அதன்பின்னர் கதிரிடம் எங்க பெரியப்பா சொத்தை ஆட்டைய போட தான் அவரை இங்க கூட்டிட்டு வந்தியா என கேட்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆகிறது.

55
முத்துவேலுக்கு என்ன ஆச்சு?
Image Credit : jiohotstar

முத்துவேலுக்கு என்ன ஆச்சு?

கதிர் - குமார் இருவரையும் பிரித்துவிட முயல்கிறார் முத்துவேல். அப்போது குமார் தள்ளிவிட்டதில் முத்துவேல் அருகில் இருந்த கல்லில் தலை அடித்து மயங்குகிறார். இதைப்பார்த்து ஷாக் ஆன கதிர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை அழைக்கிறார். ஆனால் குமார் அந்த இடத்தில் இருந்து நேராக வீட்டுக்கு சென்று சக்திவேலிடம், கதிர் பெரியப்பாவை தள்ளிவிட்டதில் அவர் தலையில் காயமடைந்து மயங்கிவிட்டதாகவும், தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பொய் சொல்கிறார். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியால் ஜெயிலுக்கு போகும் ஜனனி? போலீஸ் விசாரணையில் நடந்த ட்விஸ்ட்
Recommended image3
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Related Stories
Recommended image1
Pandian Stores 2 : தங்கமயிலிடம் சவால்விட்ட சரவணன்... பட்ஜெட் பத்மநாபனாக மாறிய செந்தில்
Recommended image2
Pandian Stores 2 : குமாருக்கு கல்தா... மோதலில் ஆரம்பித்த அரசியின் புது காதல் - எதிர்பாரா ட்விஸ்ட்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved