பிரபாஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் நயன்தாரா! சூட்டிங் ஸ்பாட் இதுதான்!
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் பாலிவுட் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Nayanthara, Prabhas
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. சமீபத்தில் பாலிவுட் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் திடீரென பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது
Nayanthara, Prabhas
இப்போது நயன்தாராவுக்கு கைவசம் பல படங்கள் உள்ளன. டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன. பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார்.
Nayanthara, Prabhas
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டதும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி தனது பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
Nayanthara, Prabhas
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹோம்லி கேரக்டருக்கு குட்பை சொல்லிவிட்டு ஒரு பாடலுக்கு ஆட ரெடியாகிவிட்டார் கூறப்படுகிறது. மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' படத்தில் நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nayanthara, Prabhas
இந்தப் படத்தில் முக்கியமான கட்டத்தில் வரும் ஒரு பாடலுக்கு மட்டும் நயன் டான்ஸ் ஆடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்க உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
Nayanthara, Prabhas
நயன்தாரா சிவாஜி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். சமீபத்தில் திரிஷா விஜயின் கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதுபோல நயனும் முயற்சி செய்கிறார் போல என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.