கிரேட் எஸ்கேப் ஆன நடிகை; காசுக்காக இரண்டாம் திருமணம் செய்தவரை கண்டீஷன் போட்டு கொள்ளும் நடிகர்!

கடந்த இரண்டு வருடத்துக்கு முன், நடிகையை விவாகரத்து செய்த நடிகர், அண்மையில் இரண்டாவது திருமணம் செய்த நிலையில், மனைவிக்கு கண்டீஷன் மேல் கண்டீஷன் போட்டு வருகிறாராம்.
 

Famous Actor who conditions his second wife? Tamil cinema Gossips mma

திரையுலகினர் மத்தியில் எப்படி காதல்... கிசுகிசு சகஜமான ஒன்றோ அதே போல் திருமணமும் - விவாகரத்தும் சகஜமானதாக மாறி விட்டது. சிலர் திருமணம் செய்த சில வருடங்களில் விவாகரத்து செய்து பிரிந்தால், இன்னும் சிலர் 15 வருடம் 25 வருடம் வாழ்ந்த பின்னர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். இதற்க்கு அந்த ஆஸ்கர் நாயகன் முதல் தேசிய விருது நடிகர் என பல உதாரணங்கள் உள்ளது.

வாரிசு நடிகருடன் திருமணம்:

சரி மேட்டருக்கு வருவோம்... தமிழ் நாட்டில் பிறந்தாலும், இங்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நடிகை ஒருவர் அக்கட தேசத்துக்கு சென்று முதல் படத்தையே வாரிசு ஹீரோவுடன் - பெரிய இயக்குனர் காம்போவில் நடித்துள்ளார். படமும் சூப்பர் ஹிட் ஆனதால், தென்னிந்திய மொழிகளில் ஒரு கட்டத்தில் பிசியாக நடிக்க துவங்கி... அரசியலில் குதித்துள்ள டாப் நடிகர் முதல், பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார். ஒரு சில காதல் சர்ச்சை இவரை சுற்றி வந்தாலும், அக்கட தேசத்தில் உள்ள வெயிட்டான நடிகரின் வாரிசை காதல் வலையில் வீழ்த்தி திருமணமும் செய்து கொண்டார்.

405 மணிநேர உழைப்பில் உருவான கீர்த்தி சுரேஷின் திருமண புடவை! அப்படி என்ன ஸ்பெஷல்?

திருமணத்திற்கு பின்னர் மனைவி ஒரு நடிகை என்பதால் நான் எந்த விதத்திலும் அவரின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறி, பக்கம் பக்கமாக டயலாக் பேச, நடிகையும் உச்சு குளிர்ந்து போனார். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆன பின்னரும் குழந்தை பெற்றுக்கொள்வதை அந்த நடிகை, கணவரியே பீட் பண்ணும் அளவுக்கு திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தார். இது தான் இவர்கள் இருவர் இடையிலும் பெரிய பிரச்சனை துவங்க காரணமாக அமைந்ததாம்.

இளம் நடிகையுடன் திருமணம்:

நடிகையின் பட தேர்வில் ஆரம்பித்த பிரச்சனை... வேற சில பிரச்சனைகளால் விவாகரத்தில் வந்து முடிந்துள்ளது. விவாகரத்துக்கு பின்னர் இளம் நடிகை ஒருவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ள அந்த நடிகர், முதல் மனைவிக்கு ஓவர் இடம் கொடுத்து தவறு செய்துவிட்டதை எண்ணி இரண்டாவது மனைவிக்கு கண்டீஷன் மேல் கண்டீஷன் போட்டு கொள்கிறாராம்.

வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?

இப்படி தான் ட்ரெஸ் பண்ணனும், நோ கவர்ச்சி, நீ நடிக்கும் படத்தின் கதை முதலில் எனக்கு தெரிய வேண்டும் என... கல்யாணத்துக்கு பிறகு போடும் கண்டீஷனால் புது மணப்பெண் இப்போவே மனம்குறிக்கொண்டிருக்கிறதாம். அண்மையில் ஒரு விசேஷத்தில் கூட புது மனைவியை முறைத்து கொண்டார். பணத்துக்கு ஆசை பட்டு தான் அந்த நடிகை இந்த நடிகரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில்,  அந்த நடிகர் திருமணமான சில நாளிலேயே இப்படி நடந்து கொள்வதால், இது எங்க போய் முடியுமோன்னு கிசுகிசு எழுந்து வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios