405 மணிநேர உழைப்பில் உருவான கீர்த்தி சுரேஷின் திருமண புடவை! அப்படி என்ன ஸ்பெஷல்?
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரின் காதலர் ஆண்டனி தட்டில் என்பவருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்த நிலையில், இந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவை பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
Keerthy suresh Wedding Saree
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. கீர்த்தி தன்னுடைய, நண்பர் ஆண்டனி தட்டில் என்கிற துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.
Typical Brahmin Wedding
ஆண்டனி தட்டில் கிறித்தவர் என்பதால், கீர்த்தி சுரேஷ் திருமணம் சர்ச்சில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், கீர்த்தி சுரேஷின் குடும்ப வழக்கத்தின் படி பிராமண முறையில் நடந்தது. கீர்த்தி மடிசார் அணிந்து ஆண்டாள் வேடத்தில், தந்தை மடியில் அமர்ந்து தாலி கட்டிக்கொண்டார்.
வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?
Keerthy Suresh Weds Long Time Boy Friend Antony Thattil
தன்னுடைய திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த விரும்பாத கீர்த்தி சுரேஷ் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனக்கு மிகவும் நெருக்கமான சினி பிரபலங்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்ததாக கூறப்பட்டது. அதன்படி கோவாவில் நடந்த திருமணத்தில் தளபதி விஜய், நடிகை த்ரிஷாவுடன் கலந்து கொண்டார்.
Trisha and Thalapathy Vijay Visit Wedding
திரிஷா மற்றும் விஜய் இருவரும் தனி விமானத்தில் சென்று... காருக்கு மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானது. விஜய்யின் ரசிகர்களே சிலர் சங்கீதாவுக்கு நீதி வேண்டும் என ஹாஷ்டாக் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமர்க்களம் லுக்கில்அஜித்; கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதிக்!
Keerthy Suresh Anita Dongre Golden Zari Saree
இந்த விவகாரம் இப்படி போய்க்கொண்டிருக்க, தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண புடவை குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணத்தில் கட்டியிருந்த மடிசார் புடவை பார்ப்பதற்கு மிகவும் எளிமையானதாக தெரிந்தாலும் இதன் விலை 3 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
Keerthy Suresh Kanjeevaram Sari Special
காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட இந்த பட்டு சேலை உயர்தர பட்டு நூலாலும், அதில் இடம்பெற்றுள்ள ஜரிகள் முழுக்க முழுக்க தங்க நூலால் நெய்யப்பட்டுள்ளது. இந்த புடவையை நெய்வதற்கு சுமார் 405 மணிநேரம் ஆனதாக கூறப்படுகிறது. அதே போல் ஆண்டனி தட்டில் பட்டு வேஷ்டி - ஜிப்பா மற்றும் அங்கவஸ்திரம் செய்ய 150 மணிநேரம் ஆனதாக கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் ஒரு காஸ்டியூம் டிசைனர் என்பதால் இந்த புடவையை அவர் தான் டிசைன் செய்தார் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் 2 விக்கெட் காலி! கண்ணீருடன் வெளியேறிய இருவர் யார் யார் தெரியுமா?