MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?

வெயிட்டான சம்பளத்தோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா - தர்ஷிகா! எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் வெளியேறிய 2 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 15 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
100 Days Game Show Bigg Boss

100 Days Game Show Bigg Boss

2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த, உலக நாயகன் கமல்ஹாசன் 8-ஆவது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். AI தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவுக்கு படிக்க சென்ற ஆண்டவர் அதை முடித்துவிட்டு வந்த கையேடு, தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

25
Kamal Hassan quit Bigg Boss Show

Kamal Hassan quit Bigg Boss Show

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி அவருடைய ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதற்கு, ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும்... கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்பதை சில பிரபலங்கள் உடைத்து கூறி வருகிறார்கள். அதே போல் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

அமர்க்களம் லுக்கில்அஜித்; கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதிக்!
 

35
Vijay Sethupathi Hosting Bigg Boss Tamil Season 8

Vijay Sethupathi Hosting Bigg Boss Tamil Season 8

இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ளே முதல் நாளே 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், பின்னர் வைட்டு கார்டு மூலம், 6 போட்டியாளர்கள் சென்றனர். இதனால் நாட்கள் குறைவாக இருந்த போதிலும் ஆட்களின் எண்ணிக்கை பிக்பாஸ் வீட்டில் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் இருந்து சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தியை எலிமினேட் செய்து 15 போட்டியாளர்களாக மாற்றிய பிக்பாஸ்... தற்போது இந்த வாரமும் இரண்டு விக்கெட்டை காலி செய்துள்ளார்.
 

45
Bigg Boss Sathya and Tharshika Eliminated

Bigg Boss Sathya and Tharshika Eliminated

அதன்படி, பிக்பாஸ் நிகழச்சியில் இருந்து சத்யா மற்றும் தர்ஷிகா வெளியேறியதாக கூறப்டுகிறது. சத்யா எதுமே செய்யாமல் லக் மூலம் 70 நாட்களை எட்டியுள்ளார் . அதே போல் கடந்த ஒரு மாதமாக கொஞ்சம், கிரிஞ்சாக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த தர்ஷிகாவையும் நீங்க வீட்டுக்கு போய் லவ் கேம் ஆடுங்கள் என அதிரடியாக வெளியேற்றியுள்ளார். 

இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் 2 விக்கெட் காலி! கண்ணீருடன் வெளியேறிய இருவர் யார் யார் தெரியுமா?

55
Tharshika and Sathya Salary

Tharshika and Sathya Salary

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்த நிலையில், 70 நாட்கள் விளையாடியதற்கு ரூ.14 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். அதே போல் மற்றொரு போட்டியாளரான, தர்ஷிகா ரூ.15,000 சம்பளமாக பெற்றதாக கூறப்பட்ட நிலையில் 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளத்துடன் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved