பிரபல சினிமா தயாரிப்பாளரும், மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணியின் துணை செயலாளர் கந்துவட்டி அன்புசெழியன் திருப்பரங்குன்றம் தொகுதியை கைப்பற்ற விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

காலியாக அறிவிக்கப்பட்ட சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கு விருப்ப மனு வினியோகம் இன்று காலை தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள், விண்ணப்பக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயை செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். காலை முதலே இந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் விருப்ப மனு அளித்தனர்.  அதனை தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிருப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் மேற்கொண்டனர். 

அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்றாலும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான வாக்குப்பதிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.  இந்த தொகுதியில் பலர் விருப்ப மனு செய்திருந்தாலும், அனைவரும் உற்று நோக்குவது மதுரை கந்துவட்டி அன்பு செழியனைத் தான். அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணியின் துணை செயலாளராக உள்ளார். திரைப்பட தயாரிப்பாளர், சினிமா வட்டிக்கு பைனான்ஸ் கொடுக்கும் கந்துவட்டி அன்பு செழியன், அதிமுகவின் மேல் மட்டத்திலுள்ள முக்கிய புள்ளிகளுக்கு நன்கு தெரிந்தவர் தான்.

அன்புசெழியனும், விருப்ப மனு தாக்கல் செய்து, நேர்காணலில் கலந்துகொண்டு விட்டார். நேர் காணல் முடிந்துவிட்ட நிலையில் யார், யார் வேட்பாளர்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும், அதற்க்கு முன்பாக தனக்கு உள்ள ஆதரவு வட்டராத்தின்மூலம் திருப்பரங்குன்றத்தைக் கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் இறங்கியிருக்கிறாராம் கந்துவட்டி அன்புசெழியன்.