சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வீழ்த்திய சி.என்.அண்ணாதுரை..!
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,00,073 வாக்குகள் வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீழ்த்தியுள்ளார்.
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,00,073 வாக்குகள் வித்தியாசத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீழ்த்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19-ம் தேதி நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆரம்பித்தில் இருந்தே திமுக கூட்டணி 38 இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது. இடைத்தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதால் அதிமுக மக்களவை தேர்தலை கணக்கிலேயே எடுத்து கொள்ளவில்லை. அப்படி இருந்த போதிலும் தேனி மக்களவை தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
இதில் திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அண்ணாதுரை 6,59,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி 3,58,620 வாக்குகள் வெற்றி தோல்வியடைந்தார். சுமார் 3,00,073 வாக்குகள் வித்தியாசத்தில் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக அளவில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றாலும், தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கும் தேவையானன இடங்களை வென்றுள்ளது. வெற்றி பெற்றும் திமுகவினரின் பொழிவு இழந்து காணப்படுகின்றனர்.