MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அப்பா விளையாடுவதை பார்க்க அம்மாவுடன் வந்த ஜஸ்ப்ரித் பும்ராவின் மகன் அங்கத் – வைரல் போட்டோஸ்!

அப்பா விளையாடுவதை பார்க்க அம்மாவுடன் வந்த ஜஸ்ப்ரித் பும்ராவின் மகன் அங்கத் – வைரல் போட்டோஸ்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தனது அப்பா ஜஸ்ப்ரித் பும்ரா எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க தனது அம்மா சஞ்சனா கணேசன் உடன் அங்கத் பும்ரா வான்கடே மைதானத்திற்கு வந்திருந்த புகைப்படம் வைரலானது.

2 Min read
Author : Rsiva kumar
Published : May 06 2024, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Jasprit Bumrah Birthday

Jasprit Bumrah Birthday

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 55ஆவது லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்து வருகிறது.

27
MI vs SRH, Jasprit Bumrah Birthday

MI vs SRH, Jasprit Bumrah Birthday

இதில், போட்டியின் முதல் ஓவரை நுவான் துஷாரா வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. 2ஆவது ஓவரை அறிமுக வீரர் அன்ஷூல் கம்போஜ் வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. துஷாரா வீசிய 3ஆவது ஓவரில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது. பின்னர் 4ஆவது ஓவர் பும்ராவிற்கு கொடுக்கப்பட்டது.

37
Jasprit Bumrah, Mumbai Indians

Jasprit Bumrah, Mumbai Indians

அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மறுபடியும் கம்போஜ் வந்தார். அவர் வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் டிராவிஸ் ஹெட் கிளீன் போல்டானார். இதையடுத்து அவர் வெளியில் நடந்து சென்று கொண்டிந்த போது நோபாலுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஹெட் மீண்டும் பேட்டிங் செய்தார். ஆனால், தனது அறிமுக போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்த கம்போஜ் மகிழ்ச்சியில் கொண்டாடினார்.

47
Jasprit Bumrah, Sanjana Ganesan

Jasprit Bumrah, Sanjana Ganesan

ஆனால், அதற்குள்ளாக நோபால் கொடுக்கப்படவே ஏமாற்றம் அடைந்தார். அடுத்த பந்திலேயும் நோபால் வீசினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் கொடுத்தார். 5 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் 51 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பும்ரா பந்து வீச வந்தார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில், இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

57
Sanjana Ganesan

Sanjana Ganesan

அப்போது கேமராமேன் கண்ணில் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் பும்ரா இருவரும் சிக்கியுள்ளனர். தனது அப்பா எப்படி விளையாடுகிறார் என்பதை பார்ப்பதற்கு குட்டி பும்ரா வான்கடே மைதானத்திற்கு தனது அம்மாவுடன் வந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

67
Jasprit Bumrah, Sanjana Ganesan

Jasprit Bumrah, Sanjana Ganesan

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் டிவி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அங்கத் என்று பெயரிட்டுள்ளனர்.

77
HBD Jasprit Bumrah

HBD Jasprit Bumrah

பும்ரா இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தனது கணவருக்கு சஞ்சனா கணேசன் அழகாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது இனியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த உலகத்தில் என்னையும், அவருடன் நிறைவு செய்தவர். அங்கத் உடன் இணைந்து அன்புடனும், அரவணைப்புடனும் உங்களுக்கு சிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா
ரோகித் சர்மா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved