Tamannaah : க்ரீமி ஒயிட் சில்க் புடவையில் வெண்சிலை போல் மின்னும் தமன்னா.. அதன் விலை இத்தனை லட்சமா?
தமன்னா தனது ரூ.1.2 லட்சம் க்ரீமி ஒயிட் சில்க் புடவையில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இதுவரை 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
2005-ம் ஆண்டு சந்த் சா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிலும் கால்பதித்தார். 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.
எனினும் இந்த படங்களில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காத நிலையில், கல்லூரி படத்தில் நடித்திருந்த தமன்னாவின் நடிப்புக்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிக்க தொடங்கிய குறுகிய காலத்திலேயே தெலுங்கு, தமிழில் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. அயன், பையா, சுறா, ஸ்கெட்ச், வீரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழில் கடைசியாக ஜெயிலர் படத்தில் தமன்னா நடித்திருந்தார். மேலும் அப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் மூலம் உலகளவில் ட்ரெண்ட் ஆனார் .
இதனிடையே வெப் சீரிஸில் கவனம் செலுத்த தொடங்கினார் தமன்னா. அவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து ஜீ கர்தா, ஆக்ரி சச் போன்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தற்போது பாந்த்ரா என்ற மலையாள படத்திலும், வேதா என்ற இந்தி படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தமன்னாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தமன்னாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சுனேஹ்ரி ஐவரி பிட்டா புடவையில் தமன்னா க்யூட்டாக இருக்கிறார். இந்த புடவையில் விலை ரூ. 28,000. என்று கூறப்படுகிறது. இந்த காஸ்ட்லியான புடவை ஆர்கன்சா பட்டு துணியில் இருந்து வடிவமைக்கப்பட்டது.
இந்த புடவைக்கு மேட்சாக கோல்டன் கலர் பிளவுஸ் மற்றும் நெக்லஸ், காதணிகளை அணிந்து தமன்னா சிலை போல இருக்கிறார்..
இதனிடையே தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான அரண்மனை 4 டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு, தமன்னா மரகத பச்சை நிறப் புடவை அணிந்திருந்தார். தமன்னாவின் புடவைகள் அனைத்து ஃபேஷன் பிரியர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.