Romeo In OTT : பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ரோமியோ திரைப்படம் விரைவில் OTT தலத்தில் வெளியாகவுள்ளது. அது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சுக்ரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் களமிறங்கியவர் தான் விஜய் ஆண்டனி. அன்று தொடங்கி இன்று வரை சுமார் 19 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார். 

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "நான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதைத்தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனிக்கு கடந்த ஆண்டு வெளியான "கொலை" மற்றும் "ரத்தம்" ஆகிய இரு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து. 

தனி விமானம் வைத்திருந்த முதல் ஹீரோயின்.. MGR, சிவாஜிக்கே சம்பளத்தில் போட்டியான மெகா ஹிட் நடிகை - யார் அவர்?

இந்நிலையில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளியான அவருடைய ரோமியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. பிரபல நடிகை மிர்னாலினி கதையின் நாயகியாக நடிக்க விநாயக் வைத்தியநாதன் என்ற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த படம் இருந்தது.

Scroll to load tweet…

மேலும் இந்த ஆண்டு "அக்னி சிறகுகள்", "ஹிட்லர்", "காக்கி" மற்றும் "வள்ளி மயில்" போன்ற படங்களில் அவர் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ரோமியோ திரைப்படம் எதிர்வரும் மே 10ம் தேதி முதல் "ஆஹா" தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Raayan First Single: தனுஷ் நடிக்கும் 'ராயன்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ். எப்போது? சன் பிச்சர்ஸ் தகவல்!