Beauty Tips : ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் மறைய புதினா இலை ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
புதினா இலை முகத்தின் தோலுக்கு நன்கு ஊட்டமளிக்கிறது. இது கிட்டத்தட்ட அனைத்து தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாகும் என்றே சொல்லலாம்.
புதினா நம் சமையலில் பயன்படுத்தப்படும் சுவையான மற்றும் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு இலை ஆகும். இருப்பினும், இது தோல் பராமரிப்புக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது மற்றும் அவற்றை வழங்குகிறது. மேலும் இந்த இலையில் இயற்கையான ஆண்டிபயாடிக், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இந்த பண்புகள் தோல் அழற்சியை நீக்கும், முகப்பரு மற்றும் தழும்புகள் இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இதன் குளிர்ச்சியான பண்புகள் காரணமாக இதை நீங்கள் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். எனவே இந்த கட்டுரையில், உங்கள் சருமப் பராமரிப்புக்கு புதினா இலையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை பற்றி 3 வழிகளில் சொல்லப்பட்டுள்ளது. அவை..
வெள்ளரி மற்றும் புதினா இலை: அரை கப் வெள்ளரி துண்டுகளை கால் கப் பொடியாக நறுக்கிய புதினா இலைகளுடன் கலந்து நன்றாக அரைத்து, அந்த பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: Beauty Tips : ஓரே இரவில் முக பரு மறைய தேங்காய் எண்ணெயுடன் 'இத' கலந்து முகத்தில் தடவினால் போதும்!
முல்தானி மிட்டி மற்றும் புதினா இலை: சில புதினா இலைகளை நன்றாக அரைத்து, ஒரு பெரிய ஸ்பூன் முல்தானி மிட்டி, சிறிது ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும்.
இதையும் படிங்க: Beauty Tips : முகத்தில் கொட்டி கிடக்கும் பருக்கள்... போக்க 3 வழிகள் இதோ..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!
ரோஸ் வாட்டர் மற்றும் புதினா இலை: புதினா இலைகள் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் தடவி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகபருக்கள் மறையும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D