Tamil News live : கோவை கார் வெடிப்பு சம்பவம்; என்.ஐ.ஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, கோவை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

5:59 PM

தென் தமிழகத்தை மையமாக கொண்டு புதிய தொழில் முதலீடுகள்.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்..

தென்னகத்தை நோக்கி தொழில் முதலீடுகள் வர வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாக என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிளித்தார்.மேலும் படிக்க
 
5:07 PM

டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

4:23 PM

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இதனால் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மட்டத்தில் பிரதமர் வருகை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பல்கலை. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் படிக்க

3:31 PM

இதுவரை உயர்கல்வி சேராத மாணவர்களுக்கு நாளை சிறப்பு முகாம்கள்..பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவது முறையாக அக்டோபர் 28, 2022 அன்று காலை 10 மணி தொடங்கி முகாம்கள் நடக்கவிருக்கின்றன. மேலும் படிக்க

2:57 PM

டாஸ்மாக்கில் அரிவாளால் கொண்டு தாக்கிய நபரால் பரபரப்பு.. வெளியான சிசிடிவி காட்சி

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்து கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவரிடம், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக வந்து திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் படிக்க

2:05 PM

நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை துவக்கம்.. நவ்.4 ஆம் தேதி வரை கனமழை..

தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை அக்டோபர்‌ 29 ஆம்‌ தேதி ஒட்டி துவங்கக்கூடும்‌ என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

1:47 PM

நயன்தாரா வாடகை தாய் விவகாரம்..! பழைய சட்ட விதியே பின்பற்றப்பட்டுள்ளது- மா.சுப்பிரமணியன்

வாடகை தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின் படி வாடகை தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
மேலும் படிக்க..

1:05 PM

நீங்க கண்டிக்காததும், எச்சரிக்காததும் தான் சிங்களர்களின் துணிச்சலுக்கு காரணம்! மோடி அரசை இறங்கி அடிக்கும் PMK

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க

12:57 PM

ஓட்டுனர், நடத்துனர் மது அருந்திவிட்டு வந்தால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு

பேருந்து பணிமனையில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திவிட்டு வந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க

12:21 PM

ஓபிஎஸ் சொன்ன ஒற்றை வார்த்தை.. எடப்பாடிக்கு ரிவிட் அடிக்க ரீ என்டரி கொடுக்கும் மருது அழகுராஜ்..!

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த மருது அழகுராஜ் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

12:13 PM

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை.. இந்தாண்டு அதிக புயல்கள்.. மிரட்டும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை அக்.29 ஆம் தேதி துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அன்று முதல் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:00 PM

கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்து 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.. அமைச்சர் செந்தில் பாலாஜி

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பாஜக அரசியல் செய்கிறது; எத்தனையோ இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் பிரதமரோ, பாஜக தலைவர்களோ வாய் திறந்துள்ளார்களா? அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர். அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது. தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போது எத்தனை முறை பிரதமர் அது குறித்து பேசியுள்ளார்; ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்தபோது எத்தனை பாஜக தலைவர்கள் அதுபற்றி பேசினார்கள். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

11:35 AM

ரூபாய் தாள்களில் லக்ஷ்மி உருவங்கள்..! குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா..? கெஜ்ரிவாலுக்கு எதிராக சீறிய திருமா

அரவ்'இந்து கெஜ்ரி'வால் ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

11:31 AM

போக்குவரத்து விதிமீறல்கள்.. நேற்று மட்டும் 2,500 வழக்குகள்! ரூ.15.50 லட்சம் அபராதம்

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக ரூ.15.50 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் வழக்குகளும், அபராதமும் அதிகரித்துள்ளது.

11:22 AM

சென்னை சென்டர் மீடியன் மின் கம்பத்தில் ஷாக்.. தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த ஐடி ஊழியர்.!

சென்னையில் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஐ.டி. ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:12 AM

எல்லை தாண்டியதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுஞ்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி உள்ளனர்.மேலும் படிக்க

10:30 AM

மக்களே அலர்ட் !! சென்னையில் திடீர் மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்..

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

10:24 AM

TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.!

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

9:58 AM

வெடி பொருட்களை பிலிப்கார்ட், அமேசானில் வாங்கிய அப்ஸர் கான்..! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கோவை சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்ஸர் கான் வெடி பொருட்களுக்கு தேவையான வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்டில் வாங்கியதாக கோவை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க..

9:26 AM

கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக 5 பேரை போலீசார்  UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:17 AM

இஸ்லாமிய பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு.. சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவேசம்..!

இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மீண்டும் அது போன்ற சதி கோவையில் நடைபெற இருந்தது அதிஷ்டவசமாக அதன் மூளையாக இருந்தவர் பலியானார். கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:57 AM

அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் புகைப்பிடித்தல் ஒழுங்கு நடவடிக்கை

சென்னையில் பணிமனைக்குள் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதலில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. 

8:15 AM

கோவை கார் வெடி விபத்து.! கைதானவர்கள் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர்...! எந்த ஜமாத்துடனும் தொடர்பில் இல்லை..? ஜமாத் நிர்வாகிகள்

கோவை வெடி விபத்தில் இறந்த முபினாக இருக்கட்டும், கைது செய்யப்பட்ட நபர்களாக  இருக்கட்டும், அவர்கள் எந்த ஜமாத்துடனுடம்  தொடர்பில் இல்லை என கோவை மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..

7:49 AM

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு.. அலறியடித்துக்கு கொண்டு ஓடிய ஊழியர்கள்..!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பை கண்டு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க

7:46 AM

திரையரங்கில் சக்கைப்போடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு

திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

7:30 AM

Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதிகளில் இன்று மின்தடை.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க.!

சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அரும்பாக்கம், நெற்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

7:30 AM

எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் கொடுத்த வேற லெவல் விளக்கம்..!

ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் போனபிறகு முதல்வரின் அனைத்து பொறுப்புகளையும் ஓபிஎஸ் அவர்களே கவனித்து கொண்டார்.  அதில் விஜயபாஸ்கர் பங்கு எதுவும் இல்லை என முன்னாள் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

5:59 PM IST:

தென்னகத்தை நோக்கி தொழில் முதலீடுகள் வர வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆர்வம் காட்டுவதாக என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டிளித்தார்.மேலும் படிக்க
 
5:07 PM IST:

தமிழக அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் எழுத்து தேர்வு குறித்து அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

4:23 PM IST:

சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இதனால் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மட்டத்தில் பிரதமர் வருகை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பல்கலை. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் படிக்க

3:31 PM IST:

மிழ்நாட்டில் உயர்கல்விக்கான சிறப்பு முகாம்கள் இதுவரை இரண்டு முறை நடத்தப்பட்டிருக்கின்றன.
மூன்றாவது முறையாக அக்டோபர் 28, 2022 அன்று காலை 10 மணி தொடங்கி முகாம்கள் நடக்கவிருக்கின்றன. மேலும் படிக்க

2:57 PM IST:

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்து கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவரிடம், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக வந்து திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் படிக்க

2:05 PM IST:

தமிழகம்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழை அக்டோபர்‌ 29 ஆம்‌ தேதி ஒட்டி துவங்கக்கூடும்‌ என்று தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

1:47 PM IST:

வாடகை தாய் முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய சட்டத்தின் படி வாடகை தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
மேலும் படிக்க..

1:05 PM IST:

தமிழக மீனவர்களை தாக்குவதோ, அத்துமீறி கைது செய்வதோ கூடாது என இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் படிக்க

12:57 PM IST:

பேருந்து பணிமனையில் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்திவிட்டு வந்தால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளார். மேலும் படிக்க

12:24 PM IST:

அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த மருது அழகுராஜ் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

12:13 PM IST:

வடகிழக்கு பருவமழை அக்.29 ஆம் தேதி துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அன்று முதல் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

12:00 PM IST:

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பாஜக அரசியல் செய்கிறது; எத்தனையோ இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் பிரதமரோ, பாஜக தலைவர்களோ வாய் திறந்துள்ளார்களா? அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர். அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது. தீவிரவாத தாக்குதல்கள் நடந்த போது எத்தனை முறை பிரதமர் அது குறித்து பேசியுள்ளார்; ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்தபோது எத்தனை பாஜக தலைவர்கள் அதுபற்றி பேசினார்கள். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது போலீஸுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை சில தகவல்களை வெளியிட்டது ஏன்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

11:35 AM IST:

அரவ்'இந்து கெஜ்ரி'வால் ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க..

11:31 AM IST:

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக நேற்று மட்டும் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக ரூ.15.50 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் வழக்குகளும், அபராதமும் அதிகரித்துள்ளது.

11:22 AM IST:

சென்னையில் சாலையின் சென்டர் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி ஐ.டி. ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

11:12 AM IST:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு கச்சத்தீவு மற்றும் நெடுஞ்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி உள்ளனர்.மேலும் படிக்க

10:30 AM IST:

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

10:24 AM IST:

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

10:21 AM IST:

கோவை சிலிண்டர் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் அப்ஸர் கான் வெடி பொருட்களுக்கு தேவையான வேதிப்பொருட்களை அமேசான், பிளிப்கார்டில் வாங்கியதாக கோவை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க..

9:26 AM IST:

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக 5 பேரை போலீசார்  UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

9:17 AM IST:

இஸ்லாமிய பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கியுள்ளது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மீண்டும் அது போன்ற சதி கோவையில் நடைபெற இருந்தது அதிஷ்டவசமாக அதன் மூளையாக இருந்தவர் பலியானார். கோட்டை ஈஸ்வரனால் கோவை காக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

8:57 AM IST:

சென்னையில் பணிமனைக்குள் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் புகைப்பிடித்தல், மது அருந்துதலில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. 

8:15 AM IST:

கோவை வெடி விபத்தில் இறந்த முபினாக இருக்கட்டும், கைது செய்யப்பட்ட நபர்களாக  இருக்கட்டும், அவர்கள் எந்த ஜமாத்துடனுடம்  தொடர்பில் இல்லை என கோவை மாவட்ட ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க..

7:49 AM IST:

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த பாம்பை கண்டு ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க

7:46 AM IST:

திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க

7:30 AM IST: