தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை.. இந்தாண்டு அதிக புயல்கள்.. மிரட்டும் வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை அக்.29 ஆம் தேதி துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அன்று முதல் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Northeast Monsoon heavy rain likely to start from oct 29 in Tamil Nadu

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.20 ஆம் தேதியை ஒட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதமாகி வரும் 29 ஆம் தேதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் வரும் 29 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்.25 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது தாமதமாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், வரும் 28 அல்லது 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோரப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 29 ஆம் தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கடலூர்‌, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, சிவகங்கை, விருதுநகர்‌, மதுரை,
தேனி, தென்காசி, திண்டுக்கல்‌, இராமநாதபுரம்‌, தூத்துக்குடி, மாவட்டங்கள்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !! சென்னையில் திடீர் மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்..

மேலும் 30 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌,செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கடலார்‌, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, திருச்சி, கரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்‌, விருதுநகர்‌, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை‌, நீலகிரி மாவட்டங்கள்‌ கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் உருவான சிட்ராங் புயல் கடந்த சில தினங்களுக்கு வங்கதேசத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக வட கிழக்கு பருவமழை தாமதமாகியுள்ளதாக தென் மண்டல இயக்குனர் தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான மற்றும் வலுவான புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்குகிறது.. வானிலை மையம் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios