மக்களே அலர்ட் !! சென்னையில் திடீர் மழை.. வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்..

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
 

Rain in Chennai

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வரும் அக்.29 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:மக்களே அலர்ட் !! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29 ஆம் தேதி தொடங்குகிறது.. வானிலை மையம் தகவல்

வரும் 29 ஆம் தேதி தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனால் காலை அலுவலகம் செல்வோரும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் நனைந்த படி சென்றனர். அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலையில் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மேலும் படிக்க:TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.!

இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி எழும்பூர், மாம்பலம், பெரம்பூர், புரசைவாக்கம், ஸ்ரீபெரும்புதூர், அயனாவரம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர், மாதவரம், பொன்னேரி, அம்பத்தூர், பல்லாவரம், ஆலந்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, மதுரவாயல், செங்கல்பட்டு பகுதிகளில் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு (காலை 11.30 வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios