அரவ்'இந்து கெஜ்ரி'வால் ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவிற்கு போட்டியாக ஆம் ஆத்மி
பாஜகவிற்கு டப் கொடுக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி பிடித்துள்ள ஆம் ஆத்மி குஜராத்தில் களத்தில் குதித்துள்ளது. விரைவில் இமாச்சல பிரதேசம், குஜராத்தில் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் குஜராத்தில் ஆம் ஆம்தி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த சில மாதங்களாக இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை.

குஜராத் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையா
இந்தோனேசியாவில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் விநாயகர் உருவம் இருக்கிறது. அது ஒரு முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இருக்கின்றனர். அவர்களால் அதைச் செய்ய முடிந்தால், நம்மாளும் அதை செய்ய முடியும் என கூறினார். மேலும் `புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும்.
TRS MLAs: ரூ.100 கோடி பேரம்! டிஆர்எஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்ற 3 பேர் போலீஸில் சிக்கினர்

புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டாலும், கடவுள்களின் ஆசி இல்லையென்றால் சில சமயங்களில் நம்முடைய முயற்சிகளுக்குப் பலன் இருக்காது என தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாக கூறியிருந்தார். இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட திருமாவளவன், அரவ்'இந்து கெஜ்ரி'வால் ரூபாய் தாள்களில் விநாயகர் லக்ஷ்மி உருவங்களை அச்சிட சொல்வது.. குஜராத் மக்களை ஏய்க்கும் தேர்தல் நாடகமா? அல்லது சங் பரிவார்களின் அரசியல் தாக்கமா? அப்பாவி இந்துக்களை ஏமாற்றும் சூதாட்டமா? அல்லது சங் பரிவார்களைத் தணிக்கும் தன்னல சூழ்ச்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
