டாஸ்மாக்கில் அரிவாள் கொண்டு தாக்கிய நபரால் பரபரப்பு.. வெளியான சிசிடிவி காட்சி
நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் பாருக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென்று பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்து கொண்டிருந்த செட்டிகுளத்தைச் சேர்ந்த மாரிராஜ் என்பவரிடம், அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக வந்து திடீரென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென கிருஷ்ணகுமார் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிராஜை வெட்டினார். இதனை தடுக்க வந்த மாரிராஜின் நண்பர் மாயாண்டி என்பவருக்கு மார்பு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது.பின்னர் அங்கிருந்த நாற்காலி, மேஜை தூக்கி வீசி உடைந்து, சுற்றி இருந்தவரை அரிவாளால் தாக்க முற்பட்டார். இதனைதொடர்ந்து எதிர் தரப்பில் கல்லைக் கொண்டு தாக்கியதில், கிருஷ்ணகுமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க:Viral Video : தாம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை! மக்கள் பீதி!
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிந்து தாக்கலில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரின் நண்பர்கள் ரஞ்சித் , பிரபாகர், பீட்டர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கிருஷ்ணகுமார் அரிவாளால் கொண்டு தாக்குவதும், அங்குள்ள மேஜை, நாற்காலிகளை தூக்கி போட்டு உடைப்பதும் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் அதிரடியாக களத்தில் குதித்த சிபிசிஐடி