Viral Video : தாம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை! மக்கள் பீதி!

தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் ஊருக்குள் புகுந்த முதலையால் அதிகாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
 

First Published Oct 26, 2022, 4:26 PM IST | Last Updated Oct 26, 2022, 4:26 PM IST

சென்னை வண்டலூர் அருகே உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் உள்ளன இந்த ஏரியில் உள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

நெடுங்குன்றம் மேட்டு தெருவில் 7 அடி நீளம் உள்ள முதலை குடியிருப்பு பகுதியில் நுழைந்தது இதை பார்த்த பொதுமக்கள் அலறடித்து ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கயிறு கட்டி முதலையை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிண்டியில் இருந்து வந்த வனத்துறையினர் முதலையை கொண்டு சென்றனர்.