கோவை கார் வெடி விபத்து..! இறந்த முபினின் உறவினர் அப்ஸர் கானை அதிரடியாக கைது செய்த போலீஸ்

கோவை கார் வெடி விபத்து தொடர்பாக 5 பேரை போலீசார்  UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்

Police have arrested 6th person in connection with Coimbatore car blast accident

கோவை கார் வெடி விபத்து

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திடீரென காரில் இருந்து சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் கார் முழுவதும் பற்றி எரிந்ததில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டதையடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த  விசாரணையில் இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிபொருட்களுக்கு தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

கோவை கார் வெடி விபத்து.! கைதானவர்கள் மூளை சலவை செய்யப்பட்டுள்ளனர்...! எந்த ஜமாத்துடனும் தொடர்பில் இல்லை..?

Police have arrested 6th person in connection with Coimbatore car blast accident

கோவை 6 வது நபர் கைது

இதனையடுத்து கார் வெடி விபத்து  தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டு UAPA சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இந்தநிலையில் 20க்கும் மேற்படவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜேமிசா முபின் பெரியம்மா மகன்  அப்சர்கான் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீசார் சோதனை செய்தனர்.

Police have arrested 6th person in connection with Coimbatore car blast accident

 பின்னர் அப்சர் கானை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பெரியப்பா பஷீர் கூறும் போது இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலையும் அதே போல வந்து வீட்டில் சோதனை செய்து கணினி எடுத்துக்கொண்டு அவரையும் அழைத்துச் சென்றதாக தெரிவித்தார். இந்தநிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முபினுக்கு உதவியதாக அவரது உறவினர் அப்ஸ்ர் கானை ஆறாவது நபர் போலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து..! ஆர்பாட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்க திட்டம்..? காவல் ஆணையர் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios