பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க நவ.11 ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர்..? வெளியான முக்கிய தகவல்..
திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் நவ. 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழாவை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு பல்கலை. நிர்வாகம் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க:தூய்மையான கடற்கரை பட்டியலில் இடம்பிடித்த லட்சத்தீவு.! வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி
இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இதனால் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 நாட்களாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் மட்டத்தில் பிரதமர் வருகை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பல்கலை. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் படிக்க:Chintan Shivir: உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கலந்தாய்வு
அதுமட்டுமின்றி, தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், காந்திகிராம பல்கலை.க்கும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை பிரதமர் வருகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.