கார்கிலில் பிரதமர் மோடியிடம் தமிழ் பாடலை பாடி அசத்திய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள்..! வைரல் வீடியோ
கார்கிலில் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடியிடம், தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் தமிழ் பாடலை பாடி அசத்தினர். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் மக்கள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை சுவைத்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிவருகின்றனர். உணவு பண்டங்களுடன் அன்பையும் அனைவருடன் பகிர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
இன்று காலையே பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, நேராக கார்கிலுக்கு சென்று அங்கு இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
இதையும் படிங்க - நீங்கதானே என் குடும்பம்.. ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை
ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த ஆண்டும் கார்கிலுக்கு சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தார். தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது கூட, குடும்பத்தினரை பிரிந்து நாட்டை காக்க எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்கள், பிரதமர் தங்களுடன் வந்து தீபாவளி கொண்டாடியதால் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்திய ராணுவ வீரர்கள் தான் தனது குடும்பத்தினர் என்றும், அவர்களுடன் தீபாவளியை கொண்டாடுவதே பாக்கியம் தான் என்று கூறி நெகிழ்ந்தார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க - கேரளாவில் 9 துணைவேந்தர்களும் பதவியில் நீடிக்கலாம்; உயர்நீதிமன்றம் உத்தரவு!!
அந்த நிகழ்வின்போது, பிரதமர் மோடியிடம் தமிழ் பாடலை பாடி அசத்தினர் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள். அதை கேட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி, அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி மகிழ்வித்தார். தமிழ் பாடலை கேட்டு ரசித்த பிரதமர் மோடி, அந்த வீடியோவை டுவிட்டரிலும் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.