Chintan Shivir: உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கலந்தாய்வு
உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கானொலி வாயிலாகக் கலந்தாய்வு நடத்த உள்ளார்.
உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள், டிஜிபிகளுடன் பிரதமர் மோடி வரும் 28ம் தேதி கானொலி வாயிலாகக் கலந்தாய்வு நடத்த உள்ளார்.
ஹரியானாவில் உள்ள சூரஜ்குந்த் பகுதியில் 27 மற்றும் 28 தேதிகளில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார்.
பெண் வலை! ஆபாச மிரட்டல் வீடியோ! கர்நாடக மடாதிபதி உயிரிழப்பில் மர்மம்
இந்த கூட்டத்தில், சைபர் கிரைம் மேலாண்மை, கிரிமினல் நீதிமுறையில் தகவல்தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகப்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு, கடற்படை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சிந்தர் ஷிவிர் என்ற பெயரில் நடக்கும் இந்த கூட்டத்தில் “விஷன் 2047” “ பஞ்ச் பிரன்” ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கல் குறித்து ஆலோசிக்கப்படும். “விஷன் 2047” “ பஞ்ச் பிரன்” ஆகியவை குறித்து பிரதமர் மோடி சுதந்திரதினத்தன்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
28ம் தேதி நடக்கும் 2வது நாள் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
முற்றிய வார்த்தைப் போர்! அமைச்சர் பாலகோபாலை நீக்குங்கள்: பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் கடிதம்
சைபர் கிரைம் மேலாண்மைக்கு உகந்த சூழலை உருவாக்குதல், போலீஸ் துறையை நவீனப்படுத்துதல், கிரிமினல் நீதிமுறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகப்படுத்துதல், நில எல்லை மேலாண்மை, கடற்படை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவை குறித்து ஆலோசி்க்கப்பட உள்ளது.
இந்தியா 2047 திட்டத்தில் பெண்கள் சக்தியின் பங்கு, பெண்கள் பாதுகாப்பு, பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 6அமர்வுகளாக நடக்கும் சிந்தன் ஷிவிரில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளது.
முதல் நாளில் ஹோம்கார்டு, சிவிப் பாதுகாப்பு, தீத்தடுப்பு, எதிரி சொத்து, சைபர் பாதுகாப்பு, போதை மருந்து கடத்தல் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி
இந்த கூட்டத்தில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறை செயலாளர்கள், யூனியன்பிரேதச லெப்டினென்ட் கவர்னர்கள், காவல்துறை டிஜிபிக்கள், மத்திய படையின் டிஜிபிக்கள், மத்திய போலீஸ் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.