இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி
இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததிலிலிருந்தே பிரிட்டன் அரசியல் களம் பரபரப்பு மிகுந்ததாகவே இருந்துவருகிறது.
ரிஷி சுனக்:
இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியவர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக். அவரே முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார். இதன்பின் லிஸ் ட்ரஸ் பதவிக்கு வந்தது தனிக்கதை. ஆனால் 45 நாட்களில் லிஸ் ட்ரஸ் பிரதமர் பதவியை துறக்க, ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர்:
இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகியுள்ள ரிஷி சுனக் ஒரு இந்திய வம்சாவளி. இந்தியாவில் பாஜக ஆட்சியில் பெரும்பான்மைவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவி வருவதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி, இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் ஆகியோர் கருத்துக்கள் தெரிவித்தனர். இது தற்போது விவாத பொருளாகிவிட்டது.
இதையும் படிங்க..Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
காங்கிரஸ் கட்சி:
ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர், கருத்துகளுக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார். அப்போது, ‘இந்தியா வேறு எந்த நாட்டிலிருந்தும் பாடம் கற்க வேண்டியதில்லை. இந்தியாவில் கடந்த காலத்தில் பல சிறுபான்மையினர் ஜனாதிபதியாகவும் முதல் அமைச்சர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
ஜாகீர் உசேன், பக்ருதீன் அலி அகமது மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோர் பல ஆண்டுகளாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் பதவியில் இருந்தனர். நம் நாட்டில், டாக்டர் ஜாகிர் உசேன் சிறுபான்மையினர் பிரிவில் முதன்முதலில் 1967-ல் ஜனாதிபதியானார், பிறகு பக்ருதீன் அலி அகமது ஜனாதிபதியானார், டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியானார்.
இந்தியா:
காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. பாரதிய ஜனதா கட்சி எதேச்சதிகாரத்தை பரப்புகிறது. பாரத் ஜோடோ யாத்திரை ஜனநாயகத்தை பரப்புகிறது. ஜனநாயக ரீதியில், ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், எங்களுக்கு பிரச்னை இல்லை. இங்கிலாந்து ஆளும்கட்சி ரிஷி சுனக்கை பிரதமராக்கியுள்ளது. அதை வரவேற்கிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில் நாம் இந்தியாவில் பார்த்ததை பற்றி கூறினால், நாம் வேறு எங்கிருந்தோ பாடம் கற்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.
இதையும் படிங்க..சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்
பிரதமர் மோடி:
வேற்றுமையின் மூலம் மட்டுமே ஒற்றுமையாக இருப்போம். பாரத் ஜோடோ யாத்திரையின் நோக்கம் பல்வேறு மொழிகள், சாதிகள் மற்றும் மதங்களை ஒன்றிணைப்பதாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடியின் எண்ணங்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் தான் மோடி ஆட்சியின் கடைசி 8 ஆண்டுகள் இவ்வாறு உள்ளன.
நேரு காலத்தில் உருவானவர் வாஜ்பாய், ஜவஹர்லால் நேருவால் வாஜ்பாய் மிகவும் ஈர்க்கப்பட்டார், அதுதான் உண்மை. ஆனால், ஜவஹர்லால் நேருவின் பாரம்பரியத்தை எப்படி அழிப்பது என்பதில் மட்டும் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..கோவை குண்டு வெடிப்பு திட்டமிட்டதுதான்.! முதல்வர் கண்டனம் சொல்லவே இல்லை - பற்ற வைக்கும் எச்.ராஜா