சத்தீஸ்கர் முதல்வருக்கு விழுந்த சவுக்கடி!! அடேங்கப்பா, பயங்கர அடி - வெளியான பகீர் காரணம்
சத்தீஸ்கர் முதல்வருக்கு சவுக்கடி விழுந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் மாநில மக்களின் நலனுக்காக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்ற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க..Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த வழிபாட்டில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார். கௌரி - கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..8 கோடி தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லையா? முதல்வர் ஸ்டாலின் இதை செய்தே ஆக வேண்டும் -கொந்தளித்த கிருஷ்ணசாமி
இந்த கௌரி - கௌரா பூஜையில் மேள, தாளங்கள் உள்ளிட்ட இசைக்கருவிகளின் பின்னணியில் கிடைக்கின்ற சவுக்கடியானது ஆசி மற்றும் வளங்களை தரும் என்பது அம்மாநில மக்களின் நம்பிக்கையாகும். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!