Solar Eclipse 2022: ஐரோப்பா முதல் இந்தியா வரை - சூரிய கிரகணத்தின் முழு புகைப்படங்கள் இதோ !!
இந்தாண்டு நிகழும் கடைசி சூரிய கிரகணத்தை இந்தியாவில் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்தியாவில் 8 சதவீதம் மட்டுமே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைப்பதால் அது சூரிய கிரகணம் எனப்படுகிறது. அதேபோல் இன்று உலகம் முழுவதும் மதியம் 2.19 மணிக்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை இருக்கும்.
ஆனால் நமது தமிழ்நாட்டில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை மட்டுமே தென்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 8 சதவீதம் மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சில நிமிடங்களுக்கு மட்டும் மேற்கு வானில் சூரிய கிரகணம் தெரிந்தது.
இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க..Live : சூரிய கிரகணம் - நேரலையில் கண்டுகளியுங்கள்!
அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் மேற்கு பகுதிகளில் ஓரளவுக்கு முழுமையாகவும், தென் இந்தியாவில் 8 சதவீதத்திற்கும் குறைவாகவும் தெரிந்தது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்தனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலும், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலும் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
புது டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புவனேஷ்வர், ஹரியானா, குருஷேத்ரா மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தெரிந்தது. ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசிய பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியளவு சூரிய கிரகணம் தென்பட்டது.
இதையும் படிங்க..சூரிய கிரகணம் ஏன்.. ஆன்மிக வரலாறும்.. அறிவியலும் சொல்வது என்ன?