Asianet News TamilAsianet News Tamil

Bande Mutt Swamiji death:பெண் வலை! ஆபாச மிரட்டல் வீடியோ! கர்நாடக மடாதிபதி உயிரிழப்பில் மர்மம்

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கஞ்சுகல் பந்தே மடத்தின் மடாதிபதி மர்மமான முறையில் உயிரிழந்ததறக்கு பின்புலத்தில் பெண் வலையில் அவர் சிக்கியது காரணமா, ரகசிய வீடியோ எடுத்து மிரட்டப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Police suspect karnataka Lingayat math seer was caught in a honey trap.
Author
First Published Oct 26, 2022, 3:03 PM IST

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள கஞ்சுகல் பந்தே மடத்தின் மடாதிபதி மர்மமான முறையில் உயிரிழந்ததறக்கு பின்புலத்தில் பெண் வலையில் அவர் சிக்கியது காரணமா, ரகசிய வீடியோ எடுத்து மிரட்டப்பட்டாரா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

ராமநகரா மாவட்டத்தில் மகடி தாலுகாவில் கெம்புபுராவில் கஞ்சுகல் பந்தே எனும் மடம் உள்ளது. 400ஆண்டுகள் பழமையான இந்த மடம் லிங்காயத் சமூகத்துக்கானது. 

இந்தியாவுக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை.. ப.சிதம்பரம் & சசி தரூருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் கட்சி

இந்த மடத்தின் மடாதிபதியாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் ஸ்ரீ பசவலிங்கேஸ்வரா சுவாமி. இந்நிலையில் திங்கள்கிழமையன்று பசவலிங்கேஸ்வரா சுவாமி தனது பூஜை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மடாதிபதி உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். 

Police suspect karnataka Lingayat math seer was caught in a honey trap.

மடாதிபதி இருந்த அறையில் இருபக்கங்களில் எழுதப்பட்ட கடிதத்தை போலீஸார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் தன்னை சிலர் மிரட்டியதாகவும், தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதை வெளியில் உலவவிட்டு தன்னுடைய மரியாதையை கெடுத்துவிடுவதாகவும் மிரட்டினர் என்று எழுதி சிலரின் பெயரை குறிப்பி்ட்டுள்ளார்.

ரூபாய் நோட்டில் கடவுள் விநாயகர், லட்சுமி! பொருளாதாரம் வளர மோடிக்கு கெஜ்ரிவால் யோசனை

இந்நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில் முதல் கட்டமாக “மடாதிபதி ஸ்ரீ லிங்கேஸ்வரா ஏதேனும் பெண் வலையில் சிக்கியிருக்கலாம். அந்த பெண்ணுடன் ரகசியமாக இருக்கும்போது வீடியோ எடுத்து அவரை மிரட்டியிருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள். அந்த பெண் யார், மிரட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

கர்நாடகாவில் மடங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆதலால், இந்த மடாதிபதியை நீக்குவதற்கு ஏதேனும் சதி செய்யப்பட்டதா, அல்லது, பெண்ணை அனுப்பி மடாதிபதியை சிக்கவைக்க முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

முற்றிய வார்த்தைப் போர்! அமைச்சர் பாலகோபாலை நீக்குங்கள்: பினராயி விஜயனுக்கு கேரள ஆளுநர் கடிதம்

ஆனால், மாடாதிபதி எழுதிய கடிதத்தில் எந்த அரசியல்தலைவரின் பெயரையும் குறிப்பிடவில்லை.ட
மடாதிபதி குறி்த்து 4 ஆபாச வீடியோக்கள் கிடைத்துள்ளன. அந்த வீடியோவில் உள்ள பெண் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவி்க்கின்றனர்

சித்ரதுர்கா முருக மடத்தின் மடாதிபதி ஷிவமூர்த்தி ஷரவணரு கடந்த இரு மாதங்களுக்கு முன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் உள்ளார். மடத்தில் படித்துவந்த குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், அவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios