என்ன ஆச்சு, எப்படி ? பதறிய பிரதமர் மோடி.. எதற்கு தெரியுமா ? வைரல் வீடியோ !

இன்று கிண்டி வளாகத்தில் காலை 10 முதல் 11.30 மணி வரை பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

PM Modi talk to a student at the anna university graduation ceremony

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா நீண்ட நாட்களாக தள்ளிப்போனது. நீண்ட நாட்களாக மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இன்று கிண்டி வளாகத்தில் காலை 10 முதல் 11.30 மணி வரை இந்த பட்டமளிப்பு விழா நடந்தது . முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்களுக்கான எதிர்காலத்தை உங்களின் மனங்களில் ஏற்கெனவே நீங்கள் கட்டமைத்திருப்பீர்கள். எனவே, இன்றைய தினம் மட்டும் சாதனைகளுக்கான தினம் அல்ல, முன்னேற்றத்திற்கானதும் கூட. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர்களை நம்பிக்கையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது. 

PM Modi talk to a student at the anna university graduation ceremony

மேலும் செய்திகளுக்கு..MiG-21 போர் விமானதிற்கு மூடுவிழா.. அபிநந்தன் முதல் அவனி சதுர்வேதி வரை.. சாதனை படைத்த வரலாறு தெரியுமா?

ஏனெனில் நீங்கள்தான் நாட்டின் வளர்ச்சி எந்திரங்கள்.  இந்தியா உலகின் வளர்ச்சி எந்திரமாக உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று இதுவரை கண்டிராத பாதிப்பாகும். ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் இந்த நெருக்கடியை எவரும் சாதாரணமாக கையாள இயலாது. இது அனைத்து நாடுகளையும் சோதனைக்கு உட்படுத்தியது. நாம் எவ்வளவு எதிர்நிலைகளை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அறியப்படாத ஒன்றை இந்தியா நம்பிக்கையோடு எதிர்கொண்டது. 

அதற்காக விஞ்ஞானிகளுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி கூறவேண்டும். ஓர் ஆணோ, பெண்ணோ தன்னை தொழில்முனைவோர் என்று சொல்லிக் கொள்வதில் சிரமம் இருந்தது. இவர்களை வாழ்க்கையில் நிலைத்தன்மை பெற்றவர்கள் என்று மற்றவர்கள் கூறுவது வழக்கம். வலுவான அரசு என்பது கட்டுப்படுத்துவது அல்ல, பொறுப்புமிக்கது. இளம் தலைமுறையிடம் எனது நம்பிக்கை உள்ளது. 

அவர்களிலிருந்துதான் ஊழியர்கள் வருவார்கள். அவர்கள் அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் வெளிவர சிங்கங்கள் போல் பாடுபடுவார்கள்“ என்ற சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளால் ஒட்டுமொத்த உலகமும் இன்று இந்தியாவின் இளைஞர்களை எதிர்நோக்கியிருக்கிறது. இந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட பங்கேற்றிருக்கிறார். 

PM Modi talk to a student at the anna university graduation ceremony

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சியில் ‘சாதி’ சண்டை வெடிக்கும்..ஸ்ரீமதி மரண சர்ச்சை - உளவுத்துறை பகீர் தகவல் !

இந்த நாட்டிற்காக உழைப்பதிலும், கனவு காண்பதிலும் அவரின் சுவடுகளை நீங்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். மாறிவரும் சூழ்நிலைகள் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள இளைஞர்களுக்கு மகத்தான சுதந்திரத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை உறுதிசெய்கிறது.உங்களின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சியாகும். உங்களின் கற்றல், இந்தியாவின் கற்றலாகும். உங்களின் வெற்றி, இந்தியாவின் வெற்றியாகும்’ என்று பிரதமர் மோடி பேசினார்.

இதற்கு முன்பு பிரதமர் மாணவர்களுக்கு பட்டமளித்த போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. பிரதமர் மோடியிடம் பட்டம் வாங்கிய மாணவன் ஒருவரின் கையில் இருந்த காயத்தை பார்த்து, என்ன ஆச்சு ? என்று கேட்க மாணவன், காயம் எப்படி ஆகியது என்று கூற, பிரதமர் மோடி டேக் கேர் (Take Care) என்று கூறினார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios