Asianet News TamilAsianet News Tamil

அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடம்பில் அந்தரங்க உறுப்பு மற்றும் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Postmortem of student srimathi Injured private parts said advocate sankar subu
Author
First Published Jul 25, 2022, 9:16 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீமதி . இவர் கடந்த 13 ஆம்  தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.   மாணவி 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து, கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது.  இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. 

பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனையடுத்து   மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கலவரம்  குறித்து  3 முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. 

Postmortem of student srimathi Injured private parts said advocate sankar subu

மேலும் செய்திகளுக்கு..இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி

36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள்ளாக மாணவி இறந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் கூறப்படுகிறது. அந்த கணக்கின்படி பார்த்தால், மாணவி 12ஆம் தேதி மதியம் 3 மணியில் இருந்து 13ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குள் அந்த மாணவி இறந்திருக்க வாய்ப்புள்ளது. பள்ளியின் கூற்றுப்படி மாணவி மாடியில் இருந்து குதித்து இருந்தால் 12ஆம் தேதி இரவு 9 மணி அளவில் மாணவி குதித்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளி விட்டிருக்கலாம் என கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் அடுக்கியுள்ள கேள்விகள் ஆகும்.

மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாயிருக்கும் தகவல்கள் என்னவென்றால், மாணவி ஸ்ரீமதியின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது ஆடைகளிலும் ரத்த கரைகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எலும்பு முறிவு, ரத்தச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவியின் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கறை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், இடது தலை பகுதி உடைந்து இருந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகளவு ரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சியால் மாணவி இறந்ததாக அறிக்கையின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

Postmortem of student srimathi Injured private parts said advocate sankar subu

ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தரப்பின் வழக்கறிஞர் சங்கரசுப்பு தற்போது அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  முதல் மற்றும் இரண்டாம் பிரேதப் பரிசோதனையிலேயே உடலின் உறுப்புகளை எடுத்திருப்பார்கள். அதன் காரணமாக மூன்றாம் முறையாக பிரேதப் பரிசோதனை செய்வதுமூலம் கண்டறிவது கடினம். ஆனால், முதல் இரண்டு பிரேதப் பரிசோதனையின் அறிக்கைகளையும், வீடியோ பதிவுகளையும் ஜிப்மர், எய்ம்ஸ் அல்லது வேறு சில சிறந்த மருத்துவமனை மருத்துவர் குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தலாம். 

மேலும் செய்திகளுக்கு..திருவள்ளூர் மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்.. சகோதரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

அந்த வீடியோ பதிவில், மாணவியின் பிறப்புறுப்பில் வன்கொடுமைக்கான தடயம் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். முதல் பிரேதப் பரிசோதனை செய்த செந்தில் குமார் மற்றும் பெண் மருத்துவரின் அறிக்கையில் அந்தச் சிறுமியின் வலது மார்பகத்தில் கடித்ததற்கான ஒரு காயம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது புணர்ச்சிக்கு பின்பான காயமாக கூட இருக்கலாம் என்றும் கருதுகிறோம். அப்படி இருந்திருந்தால் அந்த உமிழ்நீரை மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பியிருக்க வேண்டும். கல் தரையிலோ அல்லது மண் தரையிலோ விழுந்திருந்தால் இது போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புகளே இல்லை. 

Postmortem of student srimathi Injured private parts said advocate sankar subu

யாராவது பின் புறத்தில் இருந்து இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியிருந்தால் இதுபோன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், இந்தக் காயங்கள் எல்லாம் மரணத்திற்கு முன்பாக ஏற்பட்ட காயங்கள். இதனால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது. ஒரு பெண் மர்மமான முறையில் மரணமடைந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டாலோ அப்பெண்ணின் பிறப்புறுப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறாரா ? என்பது சோதனைக்கு உட்படுத்தப்படும்.

ஆனால் அந்தப் பரிசோதனை எதுவும் இந்த முதல் பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள் செய்யவில்லை. ஸ்ரீமதி எழுதிய 20 நோட்டுகளைக் கொண்டுவந்தார். இது தான் என் பெண்ணின் கையெழுத்து; அந்த தற்கொலை குறிப்பில் இருப்பது அவர் கையெழுத்து இல்லை என அவரது தாய் சொல்கிறார். எல்லாமே முரண்பாடாக இருக்கிறது. பெண் எந்த இடத்தில் விழுந்தார் என்பதை சொல்லவே இல்லை. மூன்றாம் மாடியில் இருந்து விழுந்தார் என்கிறார்கள் ஆனால், அங்கு ரத்தக் கறையே இல்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..எடப்பாடிக்கு பெரிய சிக்கல்.. உச்சநீதிமன்றத்தில் ஊழல் வழக்கு - அதிமுகவில் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios