இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறி மாறி நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி வருகிறார்கள். இது தொண்டர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.டி.பிராபகர் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அடுத்து ஓபிஎஸ் மகன்கள் உட்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்தார். இப்படி இரு தரப்பு மாறி மாறி கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வந்தார்கள். அதேபோல அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
இன்று ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறுணியம் பலராமன், எம்.சி.சம்பத், சொரத்தூர் ராஜேந்திரன், பாலகிருஷ்ண ரெட்டி, உடுமலை ராதாகிருஷ்ணன், ரவிசந்திரன், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, கிருஷ்ணமுரளி மற்றும் விஎஸ் சேதுராமன் ஆகிய 10 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதேபோல அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக. கு.ப.கிருஷ்ணன், ஜே சிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இப்படி இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவதும், நியமிப்பதும் தொடர்கதை ஆகிவருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி