கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தமிழக அரசு பள்ளிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி 3 வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறிய நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து, கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.இதனையடுத்து மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
அதன்படி தமிழகத்தில் பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும் உடனடியாக சிஇஓவின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது மாணவர்களிடையே மோதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி உள்ளிட்ட அசம்பாவிதங்கள், குடிநீர், கழிப்பறை, பற்றாக்குறை,மாணவர் சேர்க்கை மற்றும் உள்ளூர் விடுமுறை விடுதல் உள்ளிட்டவற்றை சிஇஓ அனுமதி பெற்று பத்திரிகைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளி ஆசிரியர்களும் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.மாணவர்கள் மோதிரம் அணியவும் ஆசிரியர்கள் வகுப்பறையில் மொபைல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை சொந்த வேலைக்காக ஆசிரியர்கள் வெளியே அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !