பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !
மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன்பாக பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடலூரை சேர்ந்த 17 வயது மாணவி 12-ம் வகுப்பு படிந்து வந்துள்ளார். பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தநிலையில் கடந்த 13-ம் தேதி அவரது பெற்றோரை தொடர்புகொண்ட பள்ளி நிர்வாகம் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறியதாக சொல்லப்படுகிறது.
எனினும் மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே மாணவி மரணத்துக்கு நீதி வேண்டு நேற்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. மாணவி படித்த பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் பள்ளியையும் அடித்து நொறுக்கினர்.
மேலும் செய்திகளுக்கு..எங்க பொண்ணோட கையெழுத்து இல்லை.. ஸ்ரீமதி பெற்றோர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் தற்போது இறப்பதற்கு முன்பாக மாணவி பள்ளியில் நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்கிறார். 12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல மற்றொரு வீடியோவில், வகுப்பறைக்குள் மெதுவாக நடந்துவந்த ஸ்ரீமதி, மேஜைக்கு வந்து படுத்துக்கொள்கிறார்.
அருகில் பல்வேறு மாணவிகள் குழுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் மாணவி ஸ்ரீமதி சோர்வாக இருந்ததையோ, அவர் மேஜையில் மயங்கி விழுந்ததையோ கண்டு கொள்ளவில்லை. இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?