"எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Executives sacked from AIADMK will be allowed to function again ops statement

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்ட அன்று அவரது தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் பெரும் மோதல் எழுந்தது. அந்தச் சூழலில் ஆவேசத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்த ஓபிஎஸ் தரப்பினர் அங்கிருக்கும் பொருள்களை சூறையாடினர். மேலும் கணினி, ஆவணங்கள், கோப்புகள் உள்ளிட்டவைகளையும் கையோடு எடுத்துச் சென்றனர். 

நிலைமை கைமீறி போனதையடுத்து வருவாய்த் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.  இது அக்கட்சியின் வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ்ஸும்,  ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கிற்கான தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் வழங்கினார். 

Executives sacked from AIADMK will be allowed to function again ops statement

மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !

அதில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. ஒரு மாதத்துக்கு தொண்டர்கள் யாரையும் அதிமுக அலுவலகத்துக்கு அனுமதிக்கக்கூடாது, காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் ஜெகஜீவன் ராம் அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றி அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவியை ஒப்படைத்தார். 

அதன் தொடர்ச்சியாக கட்சி அலுவலகத்திற்க்குள் இபிஎஸ் தரப்பினர் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. துணை பொதுச்செயலாளர் அறை, கொள்கை பரப்பு செயலாளர் அறை, அவைத்தலைவர் அறை என எல்லா அறைகளும் சூறையாடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த எடப்பாடி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். 

மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் நீங்க அதிமுக தொண்டரா? வெட்கமா இல்லை.. ஓபிஎஸ்சை டாராக கிழித்த சி.வி சண்முகம்

Executives sacked from AIADMK will be allowed to function again ops statement

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று அதிமுகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி கழக செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு ஏற்கெனவே பணிபுரிந்த அந்த பொறுப்புகளில் மீண்டும் அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. காலியாக உள்ள பொறுப்புகளும் விரைந்து நிரப்பப்படும். 

புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் இப்படி அறிக்கை வெளியிட்டு இருப்பது, எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். ஓபிஎஸ்சின் இந்த தூது எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வேலைக்கு ஆகுமா ? ஆகாதா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios