அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி
அதிமுகவின் இடத்தை பாஜக தற்போது பிடித்துள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் குற்றசாட்டு.
அதிமுகவில் உட்கட்சி மோதல் பெரியளவில் வெடித்து ஓபிஎஸ் தலைமையிலும் இபிஎஸ் தலைமையிலும் கட்சி பிளவுபட்டு நிற்கிறது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் இடத்தை பாஜக தற்போது பிடித்துள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் குற்றசாட்டு. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, ஆளும் கட்சிக்கும், மேலே உள்ள பாஜகவுக்கு இடையே சிக்கி கொண்டு மக்களின் பிரச்சனைகளை பேசாமல் இருக்கிறது.
தற்போது இடத்தை பாஜக பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்நிலையில் பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியின் பேட்டி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய சி.டி ரவி, ‘அதிமுகவில் தற்போது உள்கட்சி பிரச்சினை உள்ளது. கடந்த 2021 வரை அதிமுக ஆட்சியில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் அதிகாரம் மிகுந்த இரண்டாவது தலைவராகவும் இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
தொடர்ந்து அதிமுகவை யார் தலைமை தாங்கி வழி நடத்தினாலும் அவர்களுடன் பாஜக நட்பு தொடரும். கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. தற்போது பாஜக தமிழின் பெருமை, வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை முன்னெடுத்து வருகிறது. இதை தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை பாஜகவின் வளர்ச்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இப்போது அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் திமுக பலமடையும். பாஜகவுக்கு ஆளும் திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்ய ஒரு வாய்ப்பை கொடுத்து இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி வலுவடைந்து வருவதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக செயல்பாடுகளால் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருக்கும் என்று நம்புகிறோம்’ என்று பேசினார்.
மேலும் செய்திகளுக்கு..மனைவியின் பிறப்புறுப்பில் பீர் பாட்டில்.. நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர வெறிச்செயல்