மனைவியின் பிறப்புறுப்பில் பீர் பாட்டில்.. நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர வெறிச்செயல்

பெண்ணின் கணவர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

A businessman who degraded his wife along with his friend with a bottle of beer on his wife genitals

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இரவு 35 வயது பெண்ணை சிலர் சிகிச்சைக்காக சேர்த்தனர். ரத்தக் காயங்களுடன் மிகவும் சோர்வாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  அந்தப் பெண்ணை டாக்டர்கள் பரிசோதித்தனர். பெண்ணின் பிறப்பு உறுப்பு உள்ளிட்ட பல இடங்களில் காயம் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த பெண்ணின் கணவர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த தொழில் அதிபரையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். தொழில் அதிபர் மீது மனைவியை இயற்கைக்கு மாறாக பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

A businessman who degraded his wife along with his friend with a bottle of beer on his wife genitals

மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி

அவரது நண்பர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் திருச்சூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொழில் அதிபரும், அவரது நண்பரும் 14 நாட்கள் கோர்ட்டு காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், ‘பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், சென்னையில் தொழில் செய்து வருகிறார். 

அவர் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்து உள்ளார். தனது நண்பருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட்டு உள்ளார். இரும்பு சங்கிலியால் அந்த பெண்ணை கட்டி வைத்து பாலியல் வன்கொடுமையில் அவர்கள் 2 பேரும் ஈடுபட்டு உள்ளனர்.  மேலும் அந்த தொழில் அதிபர் ஈவுஇரக்கமின்றி தனது சொந்த மனைவியையே ஆபாசமாக படம் எடுத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?

A businessman who degraded his wife along with his friend with a bottle of beer on his wife genitals

அந்த ஆபாச படங்களை காட்டி மிரட்டி சித்ரவதை செய்துள்ளார். மனைவி எதிர்ப்பு தெரிவித்த போது எல்லாம் அவரது ஆபாச படங்களை செல்போனில் காட்டி இதை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி உள்ளார்.  நினைத்த போது எல்லாம் அவர்கள் இருவரும் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.  நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. 

அப்போது அந்த தொழில் அதிபர் தனது நண்பருடன் சேர்ந்து தனது மனைவியை கடுமையாக தாக்கி உள்ளார். இருவரும் அந்த பெண்ணின் பிறப்பு உறுப்பில் பீர் பாட்டிலால் காயப்படுத்தி உள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கதறி உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுள்ளனர். பிறகு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அதற்கு பிறகுதான் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios