மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?
தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் நடை பெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, கல்வித் துறை அமைச்சர் பரேஷ் அதிகாரி ஆகியோருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று சோதனை மேற்கொண்டது. இதில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நண்பர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் மட்டும் ரூ.20 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
மேலும் 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு கரன்சி, தங்கம் ஆகியவையும் சிக்கியுள்ளன. இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், 10ம் வகுப்பு தேர்வின் ஊழல் பணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
யார் இந்த அர்பிதா முகர்ஜி ? என்பதுதான் ட்ரெண்ட் டாபிக். இந்த வழக்கு வெளிவந்த உடன், பொதுமக்கள் உடனே இணையதளங்களில் அர்பிதா முகர்ஜி யார் என்று தேட தொடங்கிவிட்டனர். யார் இந்த அர்பிதா முகர்ஜி என்று இங்கு பார்க்கலாம். அர்பிதா பானர்ஜி ஒரு நடிகை. வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு..ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு சசிகலா ஆதரவு - அதிர்ச்சியில் எடப்பாடி.. மகிழ்ச்சியில் ஓபிஎஸ் !
மேலும், அவரின் உதவியாளர் என்றும் கூறப்படுகிறது. பாஜகவை சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் இதை உறுதி செய்து கொள்ளலாம். கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி சூப்பர் ஸ்டார் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜியுடன் 'மாமா பாக்னே' படத்திலும், நடிகர் ஜீத்துடன் இணைந்து 2008 இல் 'பார்ட்னர்' படத்திலும் நடித்துள்ளார்.
பார்த்தா சாட்டர்ஜியின் துர்கா பூஜை கமிட்டியின் விளம்பரப் பிரசாரங்களின் முகமாக முகர்ஜி இருந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், இந்த சோதனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்து உள்ளது. நெட்டிசன்களும் அர்பிதா முகர்ஜி யார் என்று தேடி, தற்போதைய வைரல் கன்டென்ட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !