திரையரங்கில் சக்கைப்போடு போடும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஒரு மாதத்தைக் கடந்தும் வெற்றிநடைபோட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன், கடந்த மாதம் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், வானதியாக ஷோபிதாவும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபனும் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள்... சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவினால் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படும் 'குரங்கு பெடல்'..!
ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு மத்தியிலும் மவுசு குறையாமல் வெற்றிநடைபோட்டு வருவதால், விரைவில் ரூ.500 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Asin: நடிகை அசின் மகளா இது? மளமளவென வளர்ந்து அப்படியே அம்மாவை போல் இருக்காரே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!