Asin: நடிகை அசின் மகளா இது? மளமளவென வளர்ந்து அப்படியே அம்மாவை போல் இருக்காரே.. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!
கோலிவுட் திரையுலகில், முன்னணி நடிகர்களாக உள்ள அஜித், விஜய், சூர்யா போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்த அசினின் மகள் அரினின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல நடிகைகள் கேரளாவில் இருந்து தமிழுக்கு அறிமுகம் கொடுத்தாலும், அனைத்து நடிகைகளுமே ரசிகர்கள் மனதில் அதிகம் இடம் பிடித்து விடுவது இல்லை. ஆனால் ஒரு சில நடிகைகள் திரையுலகை விட்டு விலகினாலும் அவர்களை ரசிகர்கள் எப்போதும் மறந்து இல்லை. அப்படி பட்ட நடிகைகளில் ஒருவர் தான் அசின்.
2001 ஆம் ஆண்டு மலையாள படத்திலும், 2003 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களிலும் அறிமுகமான இவர், 2004 ஆம் தான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இயக்குனர் மோகன்ராஜா, தன்னுடைய தம்பி ஜெயம் ரவியை வைத்து இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை தன் பக்கம் திருப்பினார்.
மேலும் செய்திகள்: குடி... கும்மாளம்... என நடிகர் - நடிகைகளுடன் நடந்த நடிகை சங்கீதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்! வைரல் போட்டோஸ்!
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வரிசையில் விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யா உடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்து, குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்தார்.
தமிழை தொடர்ந்து , பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் பாலிவுட் படத்தில் நடித்த போது தான் மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பார்வையிலேயே அசின் மீது காதலில் விழுந்த அவர், பின்னர் அசினையே பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
மேலும் செய்திகள்: நிவாஷினியிடம் அத்து மீறி அட்டகாசம் செய்யும் அசல்..! விட்டா நிஜமாவே கடிச்சு தின்னுடுவார் போல..! வைரல் வீடியோ..
அசின் - ராகுல் தம்பதிக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் 2017-ம் ஆண்டு அரின் என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அசினின் மகள் அரினுக்கு 5 வயது ஆகும் நிலையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை, அசின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பார்ப்பதற்கு அம்மா போலவே இருக்கும் இவரது புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அரினின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது மட்டுமே அசின் தன்னுடைய குழந்தை புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அசினின் மகள் மளமளவென வளர்ந்து அழகு தேவதை போல் ஜொலிக்கிறார் என கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகள் அள்ளிவருகிறது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!