பிக்பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விளையாடி வரும் 'சத்யா' சீரியல் நடிகை ஆயிஷாவின் முன்னாள் காதலர் இவர் தான் என... ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9-ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களை விட, தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து பல பிரச்சினைகள், சண்டைகள் அரங்கேறி வருகிறது. கிட்டத்தட்ட 70 நாட்களில் போட்டியாளர்களுக்குள் வரும் சண்டையை விட இப்போது உள்ள போட்டியாளர்கள் கண்டன்ட் கொடுக்க வேண்டும் என இல்லாத பிரச்சினையை கூட உருவாக்கி விளையாடுவதாக ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு, இந்த முறை பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பமானபோது, 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், ஒரு வாரம் கழித்து மைனா 21வது வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.
மேலும் செய்திகள்: Divyabharathi: ஜிமிக்கி கம்மலுடன்... பாவாடை தாவணியில் பளீச் அழகை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் திவ்யபாரதி!
இந்நிலையில் முதல் வாரம் ஓட்டுக்களின் அடிப்படையில், கடந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி வெளியேற்றப்பட்டார். மேலும் மக்கள் மத்தியில் நன்கு வரவேற்பை பெற்ற ஜிபி முத்து பிள்ளைகளை விட்டு பிரிந்திருக்க முடியாமல் பாசத்தின் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வரும் பணம், புகழ் என எதுவும் வேண்டாம், என கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ஒரு பாசம் மிகு தந்தையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
விரைவில் மற்றொரு பெண் போட்டியாளர் ஒருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற படலாம் என்கிற தகவல் வெளியாகி வருகிறது. அதே போல் இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள அந்த நபர் யாராக இருக்கும் என்கிற கேள்விகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
மேலும் செய்திகள்: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்..! சிக்கிய மருத்துவமனை! வெளியானது சுகாதாரத்துறையின் பரபரப்பு அறிக்கை!
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் 'சத்யா' சீரியல் புகழ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அவருடைய பெயர் மற்றும் மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி இடம் பேசிக் கொண்டிருக்கும் போது, தான் வெங்கடேஷ் என்பவரை காதலித்து வருவதாகவும்... தன்னுடைய வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும் அந்த பையன் வீட்டில் திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்பது போல் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Amala Paul Birthday Special: கவர்ச்சி குயினாக மாறி ரசிகர்களை அசரவைத்த அமலா பாலின் அட்டகாச புகைப்படங்கள்!