Divyabharathi: ஜிமிக்கி கம்மலுடன்... பாவாடை தாவணியில் பளீச் அழகை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தும் திவ்யபாரதி!
'பேச்சிலர்' பட நடிகை திவ்யபாரதி, தீபாவளியை முன்னிட்டு... மிகவும் ட்ரடிஷ்னலாக கம்மல் ஜிமிக்கி அணிந்து, பாவாடை தாவணி அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல மாடலாக இருந்து பின்னர், நடிகையாக மாறியவர் கோயம்புத்தூரை சேர்ந்த திவ்ய பாரதி. பல்வேறு பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற இவர், பின்னர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பை கைப்பற்றினார். அந்த வகையில் , நடிகர் ஜிவி. பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக 'பேச்சிலர்' படத்தில் நடித்தார்.
இவர் நடித்த முதல் படம் வெளியாகும் முன்னரே, சமூக வலைத்தளத்தில் தன்னுடைய அழகையும், கவர்ச்சியையும் வெளிப்படுத்தும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டார். எனவே மிக குறுகிய காலத்திலேயே இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 2 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்தது.
மேலும் செய்திகள்: அசீமுக்கு ஆப்பு வைக்க குறும்படம் போடச் சொல்லும் தனலட்சுமி... பொம்மை டாஸ்கால் பரபரக்கும் பிக்பாஸ் வீடு
'ஸ்வேட்,' மற்றும் 'ஆனந்தா' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய திவ்ய பாரதி, தற்போது மதில் மேல் காதல், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்கியுள்ள படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான, முகின்ராவ் தான் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.
இதுமட்டும் இன்றி, மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற' இஷ்க் காதல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் திவ்ய பாரதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பரியேறும் பெருமாள் படத்தில் நாயகன் கதிருக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு பட ஸ்டில்ஸ்... ரசிகர்களை மெர்சலாக்கிய விஜய்யின் மாஸ் லுக் போட்டோஸ் இதோ
அடுத்தடுத்த படங்களை கைப்பற்றி ஹீரோயினாக நடித்து வரும் திவ்ய பாரதி, தீபாவளியை முன்னிட்டு டர்டிஷ்னல் லுக்கில் காதல் பெரிய கம்மல் ஜிமிக்கி அணிந்து... பீச் பிங்க் நிற தாவணியில்... சந்தன நிற பாவாடை ஜாக்கெட் அணிந்து, கியூட் புகைப்படங்கள் சில வற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகம் பார்க்க பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
மேலும் செய்திகள்: துபாயில் ரகசியமாக நடந்த திருமணம்... தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா - வைரலாகும் போட்டோஸ்