- Home
- Cinema
- பொக்கிஷம் மாதிரி பாதுகாத்த ரகசியம்; போட்டுக் கொடுத்த சந்திரகலா; வெளிச்சத்திற்கு வந்த ரோகிணியின் கர்ப்பம் – கார்த்திகை தீபம் சீரியல்!
பொக்கிஷம் மாதிரி பாதுகாத்த ரகசியம்; போட்டுக் கொடுத்த சந்திரகலா; வெளிச்சத்திற்கு வந்த ரோகிணியின் கர்ப்பம் – கார்த்திகை தீபம் சீரியல்!
Rohini Pregnancy Secret Revealed by Chandrakala : கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி ஹைலைட்ஸாக பார்க்கலாம்.

Karthigai Deepam Serial
ரோகிணி கர்ப்பமாக இருப்பதை பற்றி சாமுண்டீஸ்வரி தெரிந்து கொண்டார். பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து வந்த ரகசியத்தை சந்திரகலா போட்டுக் கொடுத்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். கார்த்திகை தீபம் சீரியலில் 1127ஆவது எபிசோடில் முதலில் சர்வர் வேலைக்கு சென்ற மயில்வாகனத்திற்கு சொந்தமாக பிஸினஸ் செய்ய கார்த்திக் லோனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
ரோகிணி கர்ப்பம், சந்திரகலா, சாமுண்டீஸ்வரி
வீட்டோட்ட மாப்பிள்ளையாக இத்தனை நாட்களாக வேலைக்கு போகாமலிருந்த மயில்வாகனத்தை சந்திரகலா மாப்பிள்ளை என்று கூட பார்க்காமல் அவமானப்படுத்தினார். இதனால், மன வேதனை அடைந்த மயில்வாகனம் ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு சென்றார். எப்படியோ மயில்வாகனம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த கார்த்திக், மயில்வாகனம் சொந்தமாக பிஸினஸ் செய்ய பண உதவி தருவதாக கூறினார்.
கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் எபிசோடு
ஆனால், அதை மயில்வாகனம் மறுத்தார். மேலும், தனது முயற்சியால் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளதாக கார்த்திக்கிடம் கூறினார். பின்னர் வீட்டிற்கு வந்த மயில்வாகனம், எங்கு வேலை செய்தார் என்பதை கார்த்திக் சொல்ல, குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறக்க போகும், குழந்தைக்காக தான் வேலைக்கு சென்றதாக மயில்வாகனம் கூறினார்.
Mayilvaganam, Chamundeshwari
இதைத் தொடர்ந்து மயில்வாகனத்தை அழைத்துக் கொண்டு வங்கிக்கு சென்ற கார்த்திக் லோன் உதவி செய்து கொடுத்தார். கார்த்திக்கிற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் தருவதாக வங்கி மேனேஜர் சொல்ல, ரூ.10 லட்சம் போதும் என்று கார்த்திக் சொல்லவே, மயில்வாகனம் சொந்தமாக பிஸினஸ் செய்ய இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, இத்தனை நாட்களாக ரோகிணி கர்ப்பமாக இருந்த விஷயத்தை பற்றி பேசாமலிருந்த சீரியல் இயக்குநர் இப்போது அதைப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு
ரோகிணி மற்றும் ரேவதி இருவரும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவே, சந்திரகலா அவர்களை மருத்துவனையில் பார்த்துள்ளார். பின்னர், எதற்காக அவர்கள் இருவரும் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட சந்திரகலா, வீட்டிற்கு சென்று கையோடு சாமுண்டீஸ்வரியை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தார். அவரும், தனது மகள் ரோகிணி கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்டார். இத்தனை நாட்களாக இதைப் பற்றி தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மூடி மறைத்துவிட்டார்கள் என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.
Karthigai Deepam Serial, மயில்வாகனம்
எந்த உண்மை தெரியக் கூடாது என்று இத்தனை நாட்களாக பொக்கிஷம் மாதிரி பாதுகாத்து வந்தார்களோ அந்த ரகசியம் இப்போது சாமுண்டீஸ்வரிக்கு தெரிந்துவிட்டது. எனக்கு ஏற்கனவே தெரியும், நீ தான் நம்பவே இல்லை. இது எல்லாவற்றிற்கும் காரணம், அந்த டிரைவர் தான். இத்தனை நாட்களாக நம்மிடம் இந்த உண்மையை மறைச்சிட்டாங்க. குழந்தை பிறந்தால் உன்னோட உயிருக்கு ஆபத்து என்று சொன்னாங்க. அதை மறந்துவிடாத என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை ஏற்றிவிட்டார். ஏற்கனவே குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இனி இந்த உண்மை வேறு வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த சூழலில் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்ததாக என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.