பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அசல் கோளாறு மட்டும் பெண் போட்டியாளர்களை கண்ட ஆர்வக்கோளாறில் அத்து மீறி வருகிறார். இது குறித்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் பல சண்டை, சச்சரவுகள் ஒரு புறம் போய் கொண்டிருந்தாலும்... எதையும் கண்டுகொள்ளாமல் காதல் ஜோடி போல் பிக்பாஸ் வீட்டில் ஹாய்யாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அசல் கோளாறும் - நிவாஷினியும். இது குறித்து சில போட்டியாளர்கள் நிவாவிடம் நேரடியாக கேட்ட போது கூட, ஒன்றும் தெரியாத பாப்பாவை போல், இருவரும் நண்பர்கள் தான் என கூறினார்.
ஆனால் நிவா - அசலில் காதல் லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அசல் கோளாறு நிவாவிடம் மட்டும் தன்னுடைய சேட்டையை காட்டாமல், மைனா, ஜனனி, குயின்சி போன்ற சில போட்டியாளர்கள் மேலும் எக்கு தப்பாக கையை வைத்து கேமராவில் சிக்கினார். இதனை கேப்ச்சர் செய்து, பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் ஆயிஷாவின் முன்னாள் காதலர் யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்..!

இவர் நாமினேஷனின் சிக்கினால் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் துடித்து துடித்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம், இது குறித்து நேரடியாக கமல் கூறாமல், சூசகமாக சொல்லியும் திருந்தாமல்... மீண்டும் தன்னுடைய லீலைகளை அரங்கேற்றி பிக்பாஸ் ரசிகர்கள் கண்களில் சிக்கி உள்ளனர் அசல் கோளாறு மற்றும் நிவா. இது குறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம்..! சிக்கிய மருத்துவமனை! வெளியானது சுகாதாரத்துறையின் பரபரப்பு அறிக்கை!
இந்த வீடியோவில், நிவாவின் தோலை கடித்து திணறுவது போலவும், கைகளை கடித்து திணறுவது போலவும் ஆக்ஷன் செய்கிறார். பசிக்கிறது என்பதை நிவாவிடம் சொல்ல தான் இப்படி செய்கிறாராம். இது குறித்த வீடியோ இதோ...
